புதுதில்லி, ஜூன் 15 - பாஜக எம்.பி.யும் மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் புகாரில் குற்றப்பத்திரிகையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது தில்லி காவல்துறை. இந்திய மல்யுத்த சம்மேளன தலை வரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தில்லி ஜந்தர் மந்தரில் இடைவிடா போராட்டம், மெழுகுவர்த்தி ஊர்வலம், புதிய நாடாளுமன்றம் முற்று கை, நாட்டுக்காக வென்ற பதக்கங்களை கங்கையில் தூக்கி எறிய முயற்சி என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனு ராக் தாக்கூர் ஆகியோரை மல்யுத்த போராட்டக்குழு சந்தித்த பின் பிரிஜ் பூஷண் மீது ஜூன் 15க்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லை யென்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என மல்யுத்த போராட்டக்குழு எச்சரித்தது.
இந்நிலையில், மல்யுத்த போராட்டக் குழு கெடு விதித்திருந்த இறுதி நாளான வியாழனன்று (ஜூன் 15) பாலியல் துன்புறுத்தல் மற்றும் பின்தொடர்தல் ஆகியவற்றைக் கையாளும் இந்திய தண்டனைச் சட்டம் 354, 354 டி, 345 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவுசெய்யப் பட்ட குற்றப்பத்திரிகையை தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது, தில்லி காவல்துறை. மேலும் மல்யுத்த வீராங்க னைகள் அளித்த பாலியல் புகாரில் கஜகஸ்தான், மங்கோலியா, இந்தோ னேஷியா ஆகிய 3 நாடுகளில் நடந்த போட்டிகளின் போது பிரிஜ் பூஷணால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் அந்தந்த நாடுகளின் மல்யுத்த கூட்டமை ப்புகளுக்கு அனுப்பிய நோட்டிஸிற்கு இது வரை எந்த ஆதாரங்களும் வரவில்லை. ஆதாரங்கள் கிடைத்தால் கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யப்படும் என நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.