அமெரிக்காவை தொடர்ந்து இந்திய மாணவர்களுக்கு நெருக்கடி தரும் கனடா
ஒட்டாவா அமெரிக்காவை தொடர்ந்து இந்திய மாணவர்களுக்கு கனடா அரசும் நெருக்கடி தர துவங்கியுள்ளது. கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவிற்காக விண்ணப்பித்திருந்த இந்திய மாணவர்களில் சுமார் 80 சதவீதமானவர்களின் விசாவை அந்நாட்டு அரசு நிராகரித்துள்ளது. டிரம்ப் ஜனாதிபதியான பிறகு இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டு மாணவர்கள் அந்நாட்டி ற்குள் கல்வி கற்க வருவதை தடுக்கும் வகை யில் விசா கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இதனால் கல்விக்காக கனடாவிற்கு செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. தற்போது அந்நாடும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு மாண வர்களின் கல்விக்கு தடைகளை உருவாக்கும் வகையில் விசா கட்டுப்பாடுகளை விதித்துள் ளது. 2025 ஆம் ஆண்டில் கனடாவில் கல்வி கற்க விசா விண்ணப்பம் செய்த 80 சதவீத இந்தியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டதாக கனடா குடியுரிமை அமைப்பு உறுதி செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் கனடா ஒட்டு மொத்த மாக 4,37,000 மாணவர் விசாக்களை வழங்க வுள்ளது. இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைவாகும். அதே போல கடந்த பத்தாண்டுகளில் இவ்வளவு அதிகமான மாணவர் விசா நிராகரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 2024 இல் 1.88 லட்சம் இந்திய மாண வர்களை மட்டுமே கனடா அனுமதித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 18 சதவீதமான மாண வர்கள் கனடா செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில், 2024 இல் அது 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. விசா கட்டுப்பாட்டால் பல நாட்டு மாண வர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்திய மாணவர்களே அதிக பாதிப்புகளை எதிர்கொள்பவர்களாக உள்ளனர். கனடா இப்படி கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் சூழலில், இந்திய மாண வர்கள் ஜெர்மனி செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஜெர்மனியின் வளர்ந்து வரும் பொருளாதாரம், அரசு பல்கலைக்கழகங்களின் குறைந்த கல்விக் கட்டணம் உள்ளிட்டவை ஜெர்மனியை நோக்கி இந்திய மாணவர்களை ஈர்க்கின்றன. ஜெர்மனியில் கடந்த ஐந்து ஆண்டு களில் இந்திய மாணவர் சேர்க்கை இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. 2023 இல் 49,500 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2025இல் கிட்டத்தட்ட 60,000ஆக உயர்ந்துள் ளது. குறிப்பாக தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் வட அமெரிக்க நாடுகளை விடவும் ஜெர்மனி தரமான கல்வியை வழங்குவதாக கூறப்படு கிறது.