இந்தியாவில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த குழு பல ஆய்வுகளை மேற்கொண்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிந்துரை செய்து தங்கள் ஆய்வறிக்கையை ஒன்றிய அரசிடம் டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது.
இதைத்தொடர்ந்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21-ஆக உயர்த்தும் இந்த திட்டம் மசோதாவாக நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.