states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

5 லட்சம் கோடி டாலர் எங்கே?

2025 இல் இந்திய பொருளாதா ரத்தை 5 லட்சம் கோடி டாலர்  பொருளாதாரமாக மாற்றிவிடுவோம் என்று படாடோபமாக மோடி அறிவித்தார். ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான கோவிட்டுக்கு முந்தைய சுயேட்சையான மதிப்பீடுகள் அப்போதைய நிலையில், அதிகபட்சம் 2.6 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற நிலையை எட்ட  வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டது. ஆனால் கோவிட்டுக்கு பிந்தைய நிலைமை அதில் இன்னும் பெரிய சரிவை ஏற்படுத்தி யுள்ளது. 20,000 கோடி டாலர் முதல் 30,000 கோடி வரை இதிலும் வீழ்ச்சி ஏற்படும் என்ற கணிப்புகள் வந்துள்ளன.

திருவாளர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 8 சதவீதம் என்ற உயரிய அளவில் இருந்தது. படிப்படி யாக வீழ்ந்து 2019 - 20 நிதியாண்டில் நான்காவது காலாண்டில் வெறும் 3.1 சதவீதமாக கடும் வீழ்ச்சியை சந்தித்தது. 

கடந்த 45 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு 2017- 18 இல் 6.1 சதவீதம் அளவிற்கு வேலையின்மை உச்சத்தை தொட்டது. அதற்குப் பிறகு தற்போது பொரு ளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) நடத்தியுள்ள ஆய்வுகளின்படி இந்த விகிதம் இரண்டு மடங்கு ஆகியிருக்கிறது.

நாட்டில் அனைத்து வகையான உற்பத்தி பொருட்களின் விநியோக சங்கிலியை பணமதிப்பு நீக்கம் கடுமையாக தகர்த்தது. அதை இன்னும் சரி செய்ய முடிய வில்லை. ஜிஎஸ்டி அமலாக்கம் அனைத்து வகையான பொருட்களின் விலைகளை யும் கடுமையாக அதிகரிக்க செய்தது. கோவிட் துயரங்களிலும் கூட, மோடி அரசு இந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. 

எங்கே இருக்கிறது 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம்?