நாடு முழுவதும் ஒரே நாளில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுதில்லி மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆன பின்பு நாட்டில் பள்ளி, கல்லூரிகள், விமானநிலை யங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அதிகரித்துவிட்டது. ஆயினும் இதுதொடர்பாக ஒன்றிய அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை ; விசார ணையும் நடத்தவில்லை. இந்நிலையில், தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் பஸ்சிம் விகாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி, ரோகினி செக்டாரில் உள்ள அபினவ் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. தில்லி காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளி லிருந்து மாணவர்களை வெளியேற்றினர். சோதனைக்குப் பின் இது வெறும் புரளி என தெரியவந்த நிலையில், காவல்துறை யினர் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். பதற்றம் : பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் அறிந்து பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டதால் தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. காவல்துறையினர் ஒழுங்குபடுத்தி மாணவர் களை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். ஒரே மாதத்தில் 4ஆவது முறை : பாஜக ஆட்சி செய்து வரும் தில்லியில் இதுவரை இல்லாத வகையில் ஒரே மாதத்தில் தொடர்ச்சியாக 4ஆவது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை மாதம் 14,15 மற்றும் 16ஆம் தேதிகளில் மொத்தம் 11 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரியை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்தது. கர்நாடகாவிலும்...: கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள 40 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டலை அடுத்து பள்ளிகளில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். வழக்கம் போல இது போலியான தகவல் என்று தெரிய, மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து பெங்களூரு சைபர் கிரைம் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.