சோனித்பூர், செப். 5- பயங்கரவாதத் தொடர்புகளைக் காரணம் காட்டி மதரஸாக்களை இடித்த பிறகு, அசாமின் பாஜக அரசு சிறுபான்மை யினரைத் தொடர்ந்து வேட்டையாடுகிறது. பிரம்மபுத்திரா நதிக்கரையில் உள்ள பர்சல்லா சிட்டல்மாரி பகுதியில் ஆக்கிரமிப்பு நிலம் எனக் கூறி செப்.3 சனி யன்று 330 ஏக்கர் நிலத்தில் இருந்த குடிசை கள் இடிக்கப்பட்டன. 50 புல்டோசர்களுடன் ஏராளமான தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டனர். வெளியேற்ற அறிவிப்பு வந்ததையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினர். யாருக்கும் மறுவாழ்வளிக்கப்படவில்லை. ஒரு வாரத்தில் மூன்று மதரஸாக்கள் இடிக்கப்பட்டன. 2024 தேர்தலுக்கு முன்ன தாக பாஜகவின் அரசியல் அணிதிரட்டலின் ஒரு பகுதி வேட்டையாடுதல் இது என்று எதிர்க்கட்சி குற்றம்சாட்டின.