states

img

தோல்வியில் முடிந்த சாதிய விளையாட்டு உ.பி.யில் கலங்கும் பாஜக!

புதுதில்லி, டிச.12- விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவ தாக பிரதமர் அறிவித்த பிறகும் விவசாயி கள் மேற்கொண்ட நிலைப்பாட்டால் பாஜக வின் அரசியல் திட்டம் முறியடிக்கப்பட்டுள் ளது. போராட்டக்காரர்களை பிளவுபடுத் தும் நோக்கில் நவம்பர் 19ஆம் தேதி அறி விப்பு வெளியிடப்பட்டது. குருநானக்கின் பிறந்தநாளில் வெளியிடப்படும் அறிவிப் பின் மூலம் சீக்கிய விவசாயிகள் கலைந்து விடுவார்கள் என்றும், மீதமுள்ளவர்களை எளிதில் சமாளித்துவிடலாம் என்றும் பாஜக கணக்குப் போட்டது. ஆனால் அது தப்புக் கணக்காகிப்போனது உத்தரபிரதேசத்தில் ஜாட் விவசாயி களை திருப்திப்படுத்த ராஷ்ட்ரிய லோக் தளத்துடன் (ஆர்எல்டி) கூட்டணி அமைக்க வும் பாஜக திட்டமிட்டது. ஆனால், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்புகள் முடிவு செய்திருப்பது பாஜக வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

உத்த ரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சி யுடன் கூட்டணி அமைக்கப் போவதாக ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி நவம்பர் 23ஆம் தேதி அறிவித்தார். ஜெயந்த், முன்னாள் பிரதமரும், ஜாட் தலைவருமான சவுத்ரி சரண் சிங்கின் பேரன் ஆவார். அகி லேஷ் யாதவுடன் கைகுலுக்கும் படத்தை ஜெயந்த் ட்வீட் செய்துள்ளார். ‘ஜெயந்த் சவுத்ரியுடன் முன்னோக்கி நகர்வது’ என அகிலேஷ் படத்திற்கு தலைப்பிட்டபோது பாஜகவின் வியூகம் நிலைகுலைந்தது. ஜெயந்த் சவுத்ரி, முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா ஆகி யோர் பங்கேற்கும் ஜாட் மாநாட்டை நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத் தில் தில்லியில் நடத்த பாஜக-ஆர்எஸ்எஸ் சிந்தனைக் குழுக்கள் திட்டமிட்டிருந்தன. பஞ்சாபில் முழு தோல்வியை உறுதி செய்த பாஜக, உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க ‘ஜாட்’ எனும் துருப்புச் சீட்டைக்  கொண்டு விளையாட திட்டமிட்டுள்ளது. உ.பி.யில் அகிலேஷ் யாதவின் கூட்டங்க ளில் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்வ தால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது.

;