தில்லி அரசை தகுதி நீக்கம் செய்யக் கோரி, பாஜக எம்எல்ஏ-க்கள் செவ்வாயன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து மனு அளிக்கின்றனர். பாஜக டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பான தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் தில்லி ஆம் ஆத்மி அரசு ஊழல் செய்ததாக கூறி, பாஜக அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளை செய்து வருகிறது. அதனொரு பகுதியாக குடியரசுத் தலைவரிடமும் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளது.