ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் பாஜக ஆட்சி செய்து வரும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தற்பொழுதே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் கூட்டங்கள் அரங்கேறி வரும் நிலையில், மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவரான சமந்தர் படேல் சுமார் 850 கார்களில் தனது ஆதரவாளர்களுடன் போபால் சென்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சமந்தர் படேல் ஜாவத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் செல்வாக்கு கொண்டவர். 2020-இல் ஆட்சிக் கவிழ்ப்பின் பொழுது ஜோதிராதித்யா சிந்தியா-வுடன் பாஜக விற்கு தவியவர்களில் சமந்தர் படேலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.