states

img

குஜராத்தில் ரூ.6,000 கோடி மோசடி பாஜக பிரமுகர் சிக்கினார்

நாட்டில் நிகழும் மோசடி, கடத்தல், மத மற்றும் சாதி ரீதியிலான வன்முறை சம்பவங்கள்,பாலி யல் வன்கொடுமை கள், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட அனைத் தும் பிரதமர் மோடி யின் சொந்த மாநில மான பாஜக ஆளும் குஜராத் மாநி லத்திலேயே அதிகம் நடக்கிறது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் கூடுதல் பணம் தருவதாக (போன்சி திட்டம்) கூறி ரூ.6,000 கோடிக்கு மேல் மோசடி செய்து பாஜக பிரமுகர் ஒருவர்  தலைமைறை வாகியுள்ளார். சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிமத்நகர் தாலுகாவைச் சேர்ந்த பூபேந்திரசிங் ஜாலா என்ற பாஜக பிரமுகர், அந்த மாவட்டத்தில் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ரூ.6,000 கோடிக்கும் மேலாக வசூலித்து தலைமறைவாகிவிட்டார். இந்த விவகாரத்தை குஜராத் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பூபேந்திரசிங்கை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளனர்.  முதற்கட்ட விசாரணையில் பாஜக பிரமுகர் பூபேந்திர சிங் 2 வங்கிகளில் ரூ.175 கோடி டெபாசிட் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.