states

img

நான்கு மாநிலங்களில் பாஜக; பஞ்சாப்பில் ஆம் ஆத்மி

புதுதில்லி,மார்ச் 10- உத்தரப்பிரதேசம், உத்தர கண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா  ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மார்ச் 10 வியாழனன்று வெளியாகின.  5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது.  பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மணிப்பூர் மாநி லத்தில் பிப்ரவரி 27, மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.உத்தரப்பிர தேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை ஏழாம் கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடை பெற்றது. மார்ச் 10 மாலை 6 மணி நிலவரப்படி 5 மாநிலங்களில் கட்சிகளின் முன்னணி நிலவரம் வருமாறு:  நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உத்தரப் பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது.  403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 268 இடங்களில் முன்னணியில் உள் ளது. சமாஜ்வாதி கட்சி 130 இடங் களில் முன்னிலை வகிக்கிறது. பகு ஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும்  காங் கிரஸ் கட்சி 2 இடங்களிலும், மற்ற  கட்சிகள் 2 இடங்களையும்  கைப்பற்றி  உள்ளன. எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காமல், சிதறியதால் பாஜக மீண்டும் வெற்றிபெற்றுள்ளதாக அர சியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 70 தொகுதிகளைக்கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில்  பாஜக 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  காங்கிரஸ் கட்சி 18  இடங்களில் முன்னிலைபெற்றுள் ளது. மற்றவை 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

117 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் முன்னணியில் உள்ளது.  காங்கிரஸ் 18 தொகு திகளில் மட்டுமே முன்னணியில் உள் ளது. பாஜக 2  இடங்களிலும், சிரோன்மணி அகாலிதளம் 4 இடங் களிலும் முன்னணியில் உள்ளன.  இங்கு ஆளும்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்து,கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 60 தொகுதிகளைக்கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பாஜக 31 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. நாகா மக்கள்  முன்னணி 6 இடங்களிலும் மற்றவை 18 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. 40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில்  பாஜக 20 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும், ஆம்ஆத்மி 2 இடத்திலும் மற்றவை 6 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.