states

img

பீகாரில் ‘வாரிசு அரசியலில்’ திளைக்கும் பாஜகவும், கூட்டணிக் கட்சிகளும்

பீகாரில் ‘வாரிசு அரசியலில்’ திளைக்கும் பாஜகவும், கூட்டணிக் கட்சிகளும்

பீகாரில் தற்போது சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முக்கிய எதிர்க் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்ஜேடி) விமர்சிக்க பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினரும் மற்றும் ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல மைச்சருமான நிதிஷ் குமாரும் வாரிசு அரசியல் என்ற வார்த்தையைத் தான் வழக்கம் போல  முதன்மை பொருளாக பயன்படுத்தி வருகிறார் கள். அதாவது,”பீகாரை வாரிசு அரசியல்கா ரர்களிடம் கொடுத்துவிடாதீர்கள்” என குற்றம்சாட்டுகிறார்கள். லாலு பிரசாத், ராப்ரி தேவி, தேஜஸ்வி, மிசாபார்தி மேற்கோள்வது வாரிசு அரசியல் என்றால், பீகாரில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாரிசு அர சியல் தொடர் வண்டியை விட மிக நீளமானது. ஒன்றிய அமைச்சர் மஞ்சி இந்துஸ்தான் அவாம் கட்சியின் நிறுவ னரும், ஒன்றிய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலில் 6 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் தனது  மருமகள் தீபா மஞ்சியை இமாம்கஞ்ச் தொகுதியில் நிறுத்தியுள்ளார். மஞ்சியின் மகன் சந்தோஷ் குமார் சுமன் ஏற்கெனவே நிதிஷ் அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக உள்ளார். சந்தோஷ் குமாரின் மாமியார் ஜோதி தேவி (ஜிதன் ராமின் சம்பந்தி), பீகார் - ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள பராசத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப் பட்டு உள்ளார். குஷ்வாஹா பீகாரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் அறியப் படும் சிறிய கட்சியான ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவின் (ஆர்எல்எம்) கட்சி கூட வாரிசு அரசியலை கொண்டது. அக்கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.,யான உபேந்திர குஷ்வாஹா (முன்னாள் ஒன்றிய அமைச்சர்) சசாரம் தொகுதியில் தனது மனைவி சினேலதா குஷ்வாஹாவை வேட்பா ளராக நிறுத்தியுள்ளார். சிராக் பாஸ்வான் மக்களவையில் 2 குடும்ப உறுப்பினர்க ளைக் கொண்ட லோக் ஜன சக்தி (ராமதாஸ்)  கட்சியின் தலைவரும், ஒன்றிய அமைச்சரு மான சிராக் பாஸ்வான், வைஷாலி தொகுதி யின் எம்.பி.,யின் மகளான கோமல் சிங்கை கைகாட்டில் நிறுத்தியுள்ளார். பாஜக என்னும் தொடர் வண்டி இதை விட பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாரிசுகளின் நீண்ட பட்டியலை பாஜக கொண்டுள்ளது. பீகார் முன்னாள் முதல மைச்சர் டாக்டர் ஜெகநாத் மிஸ்ராவின் மகன் நிதிஷ் மிஸ்ரா, நிதிஷ் குமார் அமைச்சர வையில் தொழில்துறை அமைச்சராக உள்ளார். அவர் மதுபானியில் உள்ள ஜான்ஜர்பூர் தொகுதியில் மீண்டும் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.  தாராபூரில் போட்டியிடும் பாஜக தலைவ ரும், துணை முதலமைச்சருமான சாம்ராட் சவுத்ரி, முன்னாள் அமைச்சர் சகுனி சவுத்ரியின் மகன் ஆவார். அவரது தாயார் பார்வதி தேவி யும் முன்பு தாராபூரில்  எம்எல்ஏவாக இருந்தார். பாட்னாவின் திகா சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் சஞ்சீவ் சவுராசியாவும் அரசி யல் வாரிசு தான். அவரது தந்தை கங்கா பிரசாத், சிக்கிம் ஆளுநராக வருவதற்கு முன்பு பாஜக எம்எல்சியாக இருந்தார். பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகளின் வாரிசு அரசியலின் பட்டியல் இவ்வளவு பெரிதாக உள்ள நிலையில்,  ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியை மட்டும் விமர்சிப்பது ஏன்? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

387 எம்எல்ஏ, எம்.பி.,க்கள்!  நாட்டிலேயே பாஜக தான் முதலிடம்

பீகாரில் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டின் வாரிசு அரசியலில் பாஜக தான் முதலிடத்தில் உள்ளது. அக்கட்சிக்கு வாரிசு அரசியல் மூலம் 387 எம்எல்ஏ, எம்.பி.,க்கள் உள்ளனர். பாஜகவிற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 285 எம்எல்ஏ, எம்.பி.,க்கள் உள்ளனர். 3ஆவது இடத்தில் சமாஜ்வாதி கட்சியும் (55), 4ஆவது இடத்தில் தெலுங்கு தேசம் கட்சியும் (51), 5ஆவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸும் (33), 6ஆவது இடத்தில்  திமுக (30) மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளமும் (30), 7ஆவது இடத்தில் ஐக்கிய ஜனதா தளமும் (28), 8ஆவது இடத்தில் ஆம் ஆத்மியும் (11) உள்ளன. (எம்எல்ஏ, எம்.பி.,க்கள் மொத்த எண்ணிக்கை 80க்கும் அதிகமாக உள்ள கட்சியின் வாரிசு  அரசியலின் பட்டியல் மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது - ஆதாரம் : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - தில்லி)