புழுதிப் புயல், மின்னல், ஆலங்கட்டி மழையால் திணறும் பீகார்
தில்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிக ளில் கடந்த 30 நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், உத்தரப் பிரதேசம், உத்தர கண்ட், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்க ளில் பலத்த காற்றி னால் வானிலையில் திடீர் மாற்றம் ஏற் பட்டு, இடியுடன்கூடிய கனமழை புரட்டியெடுத்து வருகிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் கடந்த 30 மணி நேரத்தில் புழுதிப் புயல், மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழையால் 61 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை தொடர்பான சம்பவங்களில் 39 பேர் உயிரி ழந்தனர். அதே போல மின்னல் தாக்கிய தில் 22 பேர் உயிரிழந்தனர். அதிகபட்ச மாக நாளந்தா மாவட்டத்தில் 23 பேர் உயி ரிழந்தனர்.
தில்லிக்கும் கனமழை
தலைநகர் தில்லியில் வெள்ளியன்று வெப்பநிலை 35.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஆனால் அடுத்த 10 மணிநேரத்தில் திடீரென வானிலை மாறி தில்லியில் புழுதிப் புயலுடன் பலத்த காற்று வீசியது. இதனால் இந்திய வானி லை ஆய்வு மையம் தில்லி-என்சிஆர் பகு திக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள் ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.