பீகார் முதல் கட்டத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் நிறைவு
மொத்தம் 243 உறுப்பினர் களைக் கொண்ட பீகார் மாநில சட்டமன்றத்திற்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை அன்று நிறைவடைந் தது. கடைசி நாளில் “இந்தியா” மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததால் மாவட்ட அலுவலகங்கள் களைகட்டின. வேட்புமனு தாக்கலை வாபஸ் பெற கடைசி நாள் அக்., 20 ஆகும்.