பீகார் தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை வழக்கு குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
பாட்னா நாட்டின் கிழக்குப் பகுதியில் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் கோபால் கெம்கா. பீகார் மாநிலத்தில் பெட்ரோல் பங்க், மருத்துவமனை என பல தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஜூலை 4 அன்று இரவு பாட்னாவில் உள்ள வீட்டு வாசலிலேயே கோ பால் கெம்கா மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கோபால் கெம்காவின் வீடு பலத்த பாது காப்பு உள்ள பகுதி ஆகும். அவரது வீட்டிற்கு அருகே மாவட்ட ஆட்சியர் இல்லம், மாவட்ட கண்காணிப்பாளர் இல்லம் உள்ளது. இத னால் கோபால் கெம்காவின் கொலைச் சம்பவம் பீகார் பாஜக கூட்டணி அரசின் சட்டம்-ஒழுங்கை கேலிக் கூத்தாக்கியுள்ளது. ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இத்தகைய சூழலில், கோபால் கெம்கா கொலை வழக்கில் துப்பாக்கி வழங்கிய விகாஸ் என்பவரை செவ்வாய்க்கிழமை அன்று பாட்னா காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொன் றது. கொலைக்கு சட்டவிரோத துப்பாக்கியைத் தயாரித்து வழங்கிய விகாஸ் என்ற ராஜாவை காவல்துறையினர் சுற்றிவளைத்த போது, அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் என்கவுண்டர் செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பீகாரை நாட்டின் குற்ற தலைநகராக மாற்ற பாஜக சதி : கார்கே
பீகாரை நாட்டின் குற்றத் தலைநகராக மாற்ற பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில்,”பீகாரில் இரட்டைஇயந்திர அரசு சட்டம்-ஒழுங்கு நிலைமையை முற்றிலும் அழித்துவிட்டது. 6 மாதங்களில் 8 தொழிலதிபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மூடநம்பிக்கை காரணமாக ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி பீகாரை நாட்டின் குற்றத் தலைநகராக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. பீகாரில் வறுமை உச்சத்தில் உள்ளது. சமூக மற்றும் பொருளாதார நீதியில்நிலைமை மோசமாகிவிட்டது. சட்டம்-ஒழுங்கு தேக்க மடைந்துள்ளதால், முதலீடு வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது.இந்த முறை பீகார் பின்தங்காது. மாற்றம் நிச்சயம் உருவாகும். “இந்தியா” கூட்டணி மாற்றத்தைக் கொண்டுவரும்” என மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.