states

டி-சர்ட், காக்கி டவுசரிலேயே இன்னும் பாஜக தொங்கிக் கொண்டிருக்கிறது..!

புதுதில்லி, செப். 11 - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘பாரத் ஜோடா யாத்ரா’ எனும், இந்திய ஒற்றுமைப்  பயணத்தைத் துவங்கி நடத்தி வருகிறார். 150  நாட்களில், 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங் கள் வழியாக 3,570 கி.மீ. பயணிக்கவுள்ள அவர்,  தமிழ்நாட்டில் 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது 5-ஆவது நாளில் கேரளத்திற்குச் சென்றுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டில் பிரபல ‘வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்’ குழுவினர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது ராகுல் காந்தி பர்பெர்ரி பிராண்ட் டி- சர்ட் அணிந்திருந்ததாகவும், அதன் விலை ரூ. 41 ஆயிரத்து 257 என்றும் பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தது. ராகுலின் டி-சர்ட்,  பர்பெர்ரி பிராண்ட் டி-சர்ட் விளம்பரப் புகைப் படத்தையும் அதில் இணைத்திருந்தது. “வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து ராகுல் பாரத் ஜோடா யாத்திரை மேற்கொள்கிறார்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜோத்பூர் பொதுக்கூட்டத்தில் விமர்சித்தார். இதுபோலவே பாஜக-வினர் பலரும் ராகுல் டி-சர்ட் குறித்து விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் உடனடியாக பதிலடி கொடுத்தது. “ஆடை குறித்து பேச வேண்டும் எனில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள கூலிங் கிளாஸ் பற்றித்தான் பேச வேண்டும்.” என்று கூறியுள்ளது.

மேலும், இந்திய ஒற்றுமைப் பயணத்தில் திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து பாஜக பயப்படுவதாகவும், எதைப்பற்றியாவது விவாதிக்க வேண்டுமென்றால், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற உண்மையான பிரச்சனைகளைப் பற்றிப் பேசுமாறும் பாஜக-வை சாடியிருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அளித்த பேட்டியில், “ராகுல் காந்தி அணிந்திருந்த டிசர்ட்  திருப்பூரில் வாங்கப்பட்ட டி-சர்ட் என்றும், அது 40 ஆயிரம் ரூபாய் இல்லை.  நாலு லட்சம்  ரூபாயும் இல்லை” என்று விளக்கம் அளித்தது டன், “மோடிதான் 10 லட்சம் ரூபாயில் கோட் அணிந்து உள்ளார்” என்றும் காட்டமாக குறிப்பிட்டார். எனினும் பாஜக-வினர் ராகுலின் டி-சர்ட் குறித்தே தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவ ரும், சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகேல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா  மொய்த்ரா ஆகியோர் பாஜக-வை கடுமையாக சாடியுள்ளனர். “எதிர்க்கட்சியினர் அணியும் உடைகள் மற்றும் உடைமைகள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் எல்லை மீறி கருத்துக்களைத் தெரி விக்காதீர்கள். நினைவில் கொள்ளுங்கள். இதே போல் நாங்கள் பாஜக எம்.பி.க்கள் அணியும் கடிகாரம், பேனா, ஷூ, மோதிரம் குறித்து பேசி னால், இந்த விளையாட்டை ஆரம்பித்த நாளை  நீங்களே அழித்து விடுவீர்கள்” என்று மஹூவா மொய்த்ரா கூறியுள்ளார். “நாட்டைப் பிளவுப்படுத்தும் கட்சி இன்னும் டி-சர்ட் மற்றும் காக்கி டவுசடரிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது” என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலும் கடுமையாகச் சாடியுள்ளார். “கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யிலான மிகப்பெரிய இந்திய ஒற்றுமை பாதயாத்தி ரைக்கு எதிராக ஒன்றிய அரசிடம் டி-சர்ட் மட்டுமே உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், ஒரு கட்சி நாட்டை ஒன்றிணைக்கும் போது, பிளவுப்படுத்தும் கட்சி இன்னும் டி-சர்ட்  மற்றும் காக்கி டவுசடரில் தொங்கிக் கொண்டி ருக்கிறது” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

;