புதுதில்லி,டிச.14- கிவி பழங்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய் யப்பட்டு வந்த கிவி பழங்களில் பூச்சிகள் அதிகம் இருந்த காரணத்தினால் இறக்கு மதியை இந்தியா நிறுத்திக் கொண்டுள்ள தாகவும் பழங்களில் உள்ள பூச்சிகள் குறித்து பலமுறை எச்சரித்தும் இது தொடர்கதையாக இருந்ததால் இறக்குமதி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடையை ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய தாவர பாதுகாப்பு அமைப்பு (NPPO) அமல்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் என்பிபிஓ (NPPO). கிவி பழங்களுக்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கொடுத்த பிஸியோ சானிட்டரி சான்றிதழில் எங்கள் தரப்புக்கு உடன்பாடில்லை என சொல்லி ஈரான் வேளாண் அமைச்சகத்திற்கு கடிதம் மூலம் இந்தியா இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019-ல் இதேபோல ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிவி பழங்களில் பூச்சிகள் இருந்ததாகவும் ஈரான் தரப்புக்கு இந்தியா தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து 4000 டன் கிவி பழங்களை இந்தியா இறக்குமதி செய்கி றது. அதுமட்டுமல்லாது கிவி பழங்களின் உள்நாட்டு உற்பத்தி 13 ஆயிரம் டன்னாக இருக்கிறது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகின்றன.