states

img

பீகாரில் பிறந்த குழந்தை கோவையில் விற்பனை

கோவை, ஜூன் 10- பீகாரில் பிறந்து சில தினங்களே ஆன குழந்தையை கொண்டு வந்து, சூலூர் அருகே விற்பனையில் ஈடு பட்ட வடமாநில கும்பலையும், குழந்  தையை வாங்கிய நபரையும் போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியில் பீகாரைச் சேர்ந்த மகேஷ்  குமார் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இவர்கள் பீகாரில் இருந்து உறவினர் மூலம் வந்த குழந்தையை, திம்ம நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விஜயன் என்பவருக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக குழந்தைகள் நல அமைப் பினர், கருமத்தம்பட்டி அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தனர். அதன்பேரில் போலீ சார் விசாரணை மேற்கொண்டபோது, குழந்தை விற்பனை நடைபெற்றி ருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து பீகாரைச் சேர்ந்த மகேஷ்  குமார் – அஞ்சலியை, கடந்த ஜூன் 3 ஆம் தேதியன்று போலீசார் கைது  செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், விஜயன் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக குழந்தைகள் இல்  லாமல் தவித்து வந்துள்ளார். இதை யறிந்த அஞ்சலி - மகேஷ் குமார் தம்ப தியினர், தங்களிடம் பிறந்து 15 நாட்  களே ஆன ஒரு பெண் குழந்தை இருப்  பதாகவும், அது பீகாரில் இருப்பதால் இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்  தால் குழந்தையைப் பெற்றுத்தருவ தாக கூறியுள்ளனர். இதற்கு விஜ யன் சம்மதம் தெரிவிக்க, அஞ்சலி  பீகாரிலுள்ள தனது தாயார் பூனம்  தேவிக்கு தகவலை சொல்லியுள் ளார். பீகாரிலிருந்த பூனம் தேவி மற்  றும் அவரது இளைய மகள் மேக குமாரி, ஆகியோர் கடந்த சில தினங்க ளுக்கு முன் பீகாரில் இருந்து பிறந்து  15 நாட்கள் ஆன பெண் குழந்தையை  சூலூர் கொண்டு வந்து அஞ்சலி,  மகேஷ் குமார் தம்பதியிடம் கொடுத்து  பணத்தை பெற்றுள்ளது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து விஜ யனும் கடந்த ஜூன் 4 ஆம் தேதி யன்று கைது செய்யப்பட்டார். இதேபோல வேறு ஒரு பெண் குழந்தையினை கடந்தாண்டு ஆந்தி ராவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒரு வருக்கும் இந்த பீகார் தம்பதி விற்  பனை செய்திருந்ததும் தெரியவந் தது. இதனையடுத்து 2 குழந்தை களையும் ‘சைல்ட் லைன்’ அமைப் பின் உதவியுடன் போலீசார் மீட்ட னர். விசாரணைக்காக அஞ்சலியின்  தாய் பூனம்தேவி மற்றும் அவரது இளைய மகள் மேகா குமாரி ஆகி யோரை போலீசார் கோவை வர வழைத்து, விசாரணை மேற்கொண்ட னர். அதில், பீகார் பகுதியிலுள்ள ஒரு  ஏழை தம்பதியிடமிருந்து குழந்தை யினை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்திருப்பது உறுதியா னது. தொடர்ந்து இருவரையும் கைது  செய்த போலீசார், சூலூர் குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தை விற்பனை தொடர்பாக பீகா ரைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர்  இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு ஏதாவது குழந்தை கள் விற்பனை செய்யப்பட்டு உள்  ளதா? என போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;