states

img

மாணவர் சங்கத் தலைவர் படுகொலை

ஜெய்ப்பூர், (ராஜஸ்தான்) செப்.14- ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் உள்ளது சேத் மோதிலால் கல்லூரி. இந்தக் கல்லூரியின் மாணவர் சங்கத் தலை வராக பொறுப்பிலிருந்தவர் ராஜேஷ் ஜஜாரியா. இவர் சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி தேர்தலில் மாணவர் சங்கத்தின் வெற்றிக்காக பாடுபட்டுள்ளார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இவரை வெள்ளிக்கிழமை பதா வுண்டா என்ற இடத்தில் வைத்து கொலை செய்துள்ளது. உயிரிழந்த ஜஜாரியா உடல் உடற் கூராய்விற்காக ஜுன்ஜுனுவில் பிடிகே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனை முன்பு திரண்ட மாணவர் சங்கத்தினர் குற்றவாளி களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். ராஜேஷ் ஜஜாரியா வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர் சஞ்சீவ் குமாரை சந்தித்துவிட்டு  தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மற்றொரு வாகனத்தில் வந்த கும்பல் ராஜேஷை கட்டையால் தாக்கி யுள்ளது.

பின் அவர் இறந்துவிட்டதாக கருதி, அவரை சாலையோரம் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. தகவலறிந்து வந்த அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்து வர்கள் ராஜேஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ராஜேஷ் சமீபத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தல்களில் இந்திய மாணவர் சங்க வேட்பாளர்களை ஆதரித்து  பிரச்சாரம் செய்துள்ளார். தேர்தல் முன்விரோதம் காரணமாக ராஜேஷ் கொல்லப்பட்டதாகவும் மாணவர் சங்கத் தேர்தலையொட்டி அவர் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்ததாகவும் மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பங்கஜ்குர்ஜார் செய்தியாளர்களிடம் கூறினார். ராஜேஷ் ஜஜாரியா கொடூரமாக கொலைசெய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கண்டம் தெரிவித்துள்ளது. அவரது மறை விற்கு செவ்வணக்கம் செலுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

;