அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தொடர்பை வலுப்படுத்தும் ஏற்பாடு
கேரளத்தில் ‘முதலமைச்சர் என்னோடு’ இணைப்பு மையம் துவக்கம்
திருவனந்தபுரம் பொதுமக்களின் கருத்து கள், பரிந்துரைகள் மற்றும் புகார்களை முதலமைச்சருக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட “என்னுடன் முதல்வர்” (CM with Me) குடிமக்கள் இணைப்பு மையம் அதன் செயல் பாட்டைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை திங்களன்று வெள்ளயம் பலத்தில் உள்ள பழைய ஏர் இந்தியா அலுவலகத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இந்த சேவை 1800-425-6789 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் வழங்கப்படும். தொடக்க விழாவில் பினராயி விஜ யன் பேசுகையில்,“நிர்வாகத்தின் இறு திப் பொறுப்பு மக்களுக்கே என்ற உறுதி மொழியுடன் எல்டிஎப் அரசு சுமார் பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வருவ தாகவும், இந்தக் கொள்கையை உண் மையாக செயல்படுத்த வேண்டும். ஒவ் வொரு ஆண்டும் இறுதியில் எந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன, எவை செயல்படுத்தப்படவில்லை என் பதை வெளிப்படுத்தும் முன்னேற்ற அறிக்கை (புராக்ரஸ் ரிப்போர்ட்), அமைச்சரவை மக்களை நேரடியாக சந்தித்த புதிய கேரளம் அரங்கம், இப் போது உள்ளாட்சி அமைப்பு மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வளர்ச்சி குறித்த கூட்டங்கள்… என மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் செயல்படுத் தப்பட்டுள்ளன” என முதலமைச்சர் கூறினார். மாநில அரசுக்கும் பொதுமக்களுக் கும் இடையே தொடர்பை வலுப்படுத்த வும், மக்களின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, ‘என்னுடன் முதல்வர்’ குடிமக்கள் இணைப்பு மையம் தொ டங்கப்படுகிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், அரசின் திட்டங்கள் மற்றும் பயன்களை மக்களிடம் கொண்டு செல்வதுமே இதன் நோக்க மாக உள்ளது. குடிமக்கள் இணைப்பு மையத்தின் மேலாண்மை மற்றும் மேற்பார்வைக்கு தகவல் மக்கள் தொ டர்புத் துறை பொறுப்பாகும். அடிப் படை மற்றும் தொழில்நுட்ப வசதிக ளை கிப்பி (Kerala Infrastructure Invest ment Fund Board - KIIFB) வழங்குகிறது. இந்நிகழ்வில், வருவாய்துறை அமைச்சர் கே.ராஜன் விழாவிற்கு தலைமை தாங்கினார். அமைச்சர் கள் ரோஷி அகஸ்டின், கே.கிருஷ்ணன் குட்டி, ஏ.கே.சசீந்திரன், ராமச்சந்திரன் கடனப்பள்ளி, கே. பி.கணேஷ்குமார், வி.சிவன்குட்டி, மற்றும் வழக்கறிஞர் ஜி.ஆர்.அனில் ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாக கலந்து கொண்டனர். டொவினோ தாமஸின் முதல் அழைப்பு நடிகர் டொவினோ தாமஸ் “என்னு டன் முதல்வர்” சிட்டிசன் கனெக்ட் மையத் திற்கு முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். நிகழ்ச்சியின் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக நடிகர் முதல் வரிடம் பேசினார். இந்தத் திட்டம் வர வேற்கத்தக்கது என்றும், மக்கள் தங்கள் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் புகார் களை நேரடியாகத் தெரிவிக்கும் அமைப்பு சிறப்பாக உள்ளது என்றும் டொவினோ தாமஸ் கூறினார். இந்தக் கருத்து மதிப் புமிக்கது என்றும், கூடுதல் ஆதரவு தேவை என்றும் முதலமைச்சர் கூறினார். நடிகரின் அன்பான வார்த்தை களுக்கு நன்றி தெரிவித்தார்.
