states

கேரள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1017 கோடி ஒதுக்கீடு; இந்த ஆண்டு இதுவரை வழங்கப்பட்டது ரூ.7258 கோடி

திருவனந்தபுரம், செப்.14- வளர்ச்சியை விரைவுபடுத்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கு திட்ட ஒதுக்கீடாக, ரூ.1017 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஊராட்சிகளுக்கு ரூ.519 கோடி, ஊராட்சி ஒன்றி யங்களுக்கு 36 கோடி, மாவட்ட பஞ்சாயத்துக ளுக்கு ரூ.262 கோடி, நகராட்சிகளுக்கு ரூ.103 கோடி, மாநகராட்சிகளுக்கு ரூ.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு நிதியாக பட்ஜெட்டில் அரசு அறிவித்த ரூ.3006 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துகளை மறுசீரமைக்கவும் பராமரிக்கவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு இனங்களில் ஒதுக்கப்பட்ட ரூ.12,903 கோடியில் ரூ.7258 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தேவைகள் நிதியாக ரூ.926 கோடியும், மாநிலத் திட்டங்களின் பங்கு மேம்பாட்டு நிதியாக ரூ.1877 கோடியும். நிதி ஆயோக் பரிந்துரையின் பேரில் நிபந்தனையற்ற மானியமாக ரூ.325 கோடி ரூபாயும், பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகளுக்கு ரூ.1124 கோடி நிபந் தனை அடிப்படையிலான மானியமாகவும் வழங் கப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு ரூ.4021 கோடி யும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.540 கோடி யும், மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு ரூ.1044 கோடி யும், நகராட்சிகளுக்கு ரூ.796 கோடியும், மாநக ராட்சிகளுக்கு ரூ.857 கோடியும் நிதியாண்டின் பாதிக்குள் வழங்கப்பட்டுள்ளது. ஆறாவது மாநில நிதிக்குழுவின் பரிந்துரை யின்படி, இந்த ஆண்டுக்கான உள்ளாட்சிகளின் சாலை மற்றும் சாலை பாதுகாப்பு நிதி பிரிக் கப்பட்டு பட்ஜெட் ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டை விட, நிதி குறைவாக உள்ளதாக உள்ளாட்சி அமைப்புகள் புகார் எழுப் பின. அதைத்தொடர்ந்து 2020-21இல் அனுமதிக் கப்பட்ட விகிதத்தில் மறுசீரமைக்கப்பட்டு நிதி வழங்கப்பட்டது. நிதி ஆயோக் பரிந்துரை அடுத்த ஆண்டு அமல்படுத்தப்பட உள்ளது.

;