அகமதாபாத், டிச. 15 - குஜராத்தில், அன்னை தெரசாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனம், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, அம்மாநில பாஜக அரசின் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும், ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லங்கள், பள் ளிக் கூடங்கள், எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கான நலவாழ்வு மையங்கள், இல வச உணவு வழங்குமிடங்கள் ஆகிய வற்றை நிறுவி, தன்வாழ்நாள் முழுவதும் சேவையாற்றியவர் அன்னை தெரசா. அத்தகைய அன்னை தெரசாவால் 1950-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுதான் ‘மிஷ னரிஸ் ஆப் சாரிட்டி’ தொண்டு நிறுவனம் ஆகும். வதோதராவில் இந்த நிறுவனம் சிறுமிகளுக்கான காப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறது. இந்த காப்பகத்தில்தான் தற்போது கட்டாய மதமாற்றம் நடப்பதாக கூறி, மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதன் மூலம் அவர்களின் உணர்வுகளை தூண்டி விடும் வகையில் திட்டமிட்ட மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள் (295 ஏ), ஒரு நபரின் மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைகளை வேண்டுமென்றே கூறு தல் (298) மற்றும் குஜராத் மதச் சுதந்திரம் சட்டம் 2003 ஆகிய ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“வதோதரா மாவட்ட சமூகநல அதி காரி மயங்க் திரிவேதி, கடந்த டிசம்பர் 9 அன்று மாவட்ட குழந்தைகள் நலக் குழு வின் தலைவருடன், மகர்புரா பகுதியில் உள்ள ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ நிறு வனத்தின் சிறுமிகள் இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டார். அப்போது, சிறுமி களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் நோக்கத்துடன், அவர்களை கிறிஸ்தவ மத நூல்களைப் படிக்கவும், கிறிஸ்தவ நம்பிக்கையின் பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் கட்டாயப்படுத்தி வருவதைக் கண்டறிந்துள்ளார். 2021 பிப்ரவரி 10 முதல் 2021 டிசம்பர் 9 வரை, இந்துக்களின் மத உணர்வு களை வேண்டுமென்றே மற்றும் கசப்பு டன் புண்படுத்தும் நடவடிக்கைகளில் ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ நிறுவனம் ஈடு பட்டுள்ளது. காப்பகத்தில் உள்ள சிறுமி களை கழுத்தில் சிலுவை அணிய வைப்ப தன் மூலம் கிறித்துவ மதத்தைத் தழுவும்படி வற்புறுத்தியுள்ளது.
பைபிளைப் படிக்கும் படி கட்டாயப்படுத்துவதற்காக, பெண்கள் பயன்படுத்தும் ஸ்டோர்ரூம் மேஜையின் மீது பைபிளை காட்சிப்படுத்துவது போன்றவை மூலம் சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடு பட்டுள்ளது.” என்று மகர்புரா காவல் நிலை யம் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. மேலும், இந்துப் பெண்ணை கிறிஸ் தவ பாரம்பரியத்தின்படி கிறிஸ்தவ குடும் பத்தில் திருமணம் செய்து கொள்ள ‘மிஷ னரிஸ் ஆப் சாரிட்டி’ வற்புறுத்தியுள்ளது. காப்பகத்தில் வசிக்கும் இந்துச் சிறுமி களுக்கு வேண்டுமென்றே அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், “நாங்கள் எந்த மதமாற்ற நட வடிக்கையிலும் ஈடுபடவில்லை. எங்கள் காப்பகத்தில் 24 சிறுமிகள் உள்ளனர். இவர்கள் எங்களுடனே வாழ்வதால், நாங்கள் ஜெபிக்கும்போது, அவர்களும் எங்கள் நடைமுறையைப் பின்பற்றுகிறார் கள். நாங்கள் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை. கிறிஸ்தவ மதத்தினரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என் றும் வற்புறுத்தவில்லை” என்று மிஷ னரிஸ் ஆப் சாரிட்டியின் செய்தித் தொடர்பாளர் தங்கள் மீதான குற்றச் சாட்டுகளை மறுத்துள்ளார்.