புதுதில்லி, ஜூலை 16- சமீபத்தில் நாட்டில் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளப் பெருக்கினைத் தேசியப் பேரிட ராக அறிவித்து, பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உரிய மீட்பு நடவடிக்கை களை மேள்கொள்ள வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் பல பகுதிகளில் சமீபத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளம் ஆகிய வற்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமைகள் குறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் தன் ஆழ்ந்த கவலைகளை வெளிப் படுத்திக் கொள்கிறது. நாட்டின் வடக்கு மற்றும் வட மேற்கில் உள்ள மாநிலங்களான இமாச்சலப் பிர தேசம், பஞ்சாப்பின் ஒரு பகுதி, ஹரியானா, சண்டிகர், ஜம்மு-காஷ்மீர், உத்தர்கண்ட், உத்தரப்பிர தேசம், தெற்கில் கேரளம் மற்றும் வட கிழக்கில் அசாம் ஆகிய மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் இறந்துள்ளார் கள், மிகப்பெரிய அளவில் சேதங் கள் ஏற்பட்டுள்ளன.
பல மாநிலங்களிலும் அநேகமாக விளைந்த பயிர்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன. இமாச்சலப் பிரதேசத்திலும் வட இந்திய மாநிலங்கள் சிலவற்றிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகவும் அதிகமாகும். இவற்றை ஒன்றிய அரசாங்கம் தேசியப் பேரிடராக அறி வித்து, அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள முன்வர வேண்டும். இதுவரை வந்துள்ள செய்தி களின்படி, 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள், கால்நடை களும் மற்றும் சொத்துக்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன. உத்தர்கண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பல பிராந்தியங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக சாலை கள் மற்றும் பாலங்கள் கடும் பாதிப்பு க்கு உள்ளாகி, மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளன, பல கிராமங்கள் இதர பகுதிகளுடன் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வெள்ளத்தாலும் மழையாலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் துக்கத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கமும் பங்கு கொள்கிறது. அதேபோன்று பயிர்கள், சொத்துக்கள் இழந்து, வீடற்றவர்களாக மாறி அவதிக்கு உள்ளாகி இருப்போருக்கும் தனது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது.
இவர்களுக்கு சுத்தமான குடிநீர், உணவு மற்றும் மருத்துவ உதவி முதலானவை முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்பட வேண்டியது உடனடித் தேவை களாகும். இலவச ரேசன், விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை யில்லாக் காலத்திற்கான ஊதியம் முதலானவையும் அளிக்கப்பட வேண்டும். பயிர்க்கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட வேண்டும். கால்நடைகளுக்கான தீவனங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனையும் களைந்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கத்தினர் உதவிடுக! வெள்ளம் தணிந்த பின்னர்தான் பாதிப்பு தொடர்பாக முழுமையான சேதாரம் குறித்து மதிப்பிடப்பட முடியும். தில்லி உட்பட வட இந்திய மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக் கின்றன. இவற்றை சீர் செய்வ தற்காக அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள திட்டங்கள் போதுமானவையாக இல்லை. பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளையும், போதுமான அளவிற்கு இழப்பீட்டுத் தொகை களையும் அவசரகதியில் அளித்திட் வேண்டும் . பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கான நிவாரணப் பணி களில் சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவிட முன்வர வேண்டும் என்று தன் சங்கத்தின் கிளைகளையும், முன்னணி ஊழியர்களையும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)