மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள்
அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி உள்ளிட்ட முதுநிலை இடங்க ளை அதிகரிக்க உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் இடங்களை கூடுதலாக 5,023 அதிகரிக்கவும் எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட மருத்துவ மேற் படிப்புக்கான இடங்களை 5,000 ஆக அதிகரிக்கவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவப் படிப்பு இடத்துக்கு ரூ.1.5 கோடி வீதம் இரு திட்டங்களுக்கும் சேர்த்து 15,034.50 கோடி ரூபாயும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2025-26 கல்வியாண்டில் இருந்து 2028-29 கல்வியாண்டுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.