தெலுங்கானா மாநிலத்தில் நவம் பர் 30 அன்று சட்டமன்றத் தேர் தல் நடைபெறவுள்ளது. உட் கட்சி மோதல் மற் றும் சீட் கிடைக்காத காரணத்தினால் பாஜகவின் எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற் றும் முக்கிய தலை வர்கள் காங்கிரஸ், கட்சியில் இணை ந்து வருகின்றனர். இந்நிலையில், புத னன்று முன்னாள் எம்.பியும், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான விவேக் வெங்கட்சாமி காங்கிரஸ் கட்சி யில் இணைந்தார். இந்த விவகாரம் பாஜக விற்குள் கடும் அதிர்ச்சி அலையை ஏற் படுத்திய நிலையில், சீட் மறுக்கப்பட்ட தால் தெலுங்கானா பாஜகவின் முக்கிய தலைவராக இருக்கும் நடிகை விஜய சாந்தி விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதற்கு ஆதாரமாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “மக்களை காங்கிரஸ் கட்சி தான் காப்பாற்ற வேண்டும்” என விஜயசாந்தி பதிவிட்டுள்ளார். தென் னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி 1998இல் பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு காங்கிரஸ், பிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவிய விஜயசாந்தி மீண்டும் 2020இல் பாஜகவில் இணைந்தார்.