* எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர் 2010-ஆம் ஆண்டு முதல் மொத்தம் ஏழு விபத்துகளைச் சந்தித்துள்ளது. இதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
* 2010 - நவம்பர் 19- அருணாச்சலப்பிரதேசத்தில் தவாங் விமானதளத்திலிருந்து குவஹாத்திக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 12 ஆயுதப் படை வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் இருவர் விமானிகள், ஒருவர் ராணுவ அதிகாரி.
* 2012 - ஆகஸ்ட் 30 - குஜராத்தின் ஜாம்நகர் விமானப்படைத் தளத்திலிருந்து 10 கி.மீ., தொலைவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் இரண்டு எம்ஐ-17 வி5ஹெலிகாப்டர்களில் இருந்த ஐந்து அதிகாரிகள் உட்பட ஒன்பது விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
* 2013 - ஜூன் 15 - உத்தரகண்ட் மாநிலத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இந்த ரக ஹெலிகாப்டர் மீட்புப்பணியில் ஈடுபட்டு, கேதர்நாத்திலிருந்து திரும்பியது. அப்போது நடந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த எட்டுப் பேர் காயமடைந்தனர்.
* 2017-ஆம் ஆண்டு அருணாச்சலபிரதேச மாநிலம் சுனாவில் நடைபெற்ற விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இந்தியா-சீனா எல்லையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், தவாங்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள மலைப்பாங்கான நிலப்பரப்பில் நடைபெற்றது.
* 2018 - ஏப்ரல் 3 - கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஆறுபேரும் உயிர் தப்பினர்.
* 2019 - பிப்ரவரி 27 - ஜம்மு மற்றும் காஷ்மீரில் புட்காம் என்ற இடத்தில் நடந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
* 2021 - நவம்பர் 8 - கிழக்கு அருணாச்சலப்பிரதேசத்தில் ராணுவத் தளத்தில் தரையிறங்கும்போது திடீரென தரையில் மோதியது. ஆனால், சிறுவிபத்து என்பதால், விமானிகள், வீரர்கள் சிறிய காயங்களுடன் தப்பித்தனர்.
* 2021 - டிசம்பர் 8 - தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.