ஏபிவிபி குண்டர்கள் அட்டூழியம் மத்தியப்பிரதேசத்தில் வன்முறை பதற்றம்
மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக மோகன் யாதவ் உள்ளார். இந்த மாநிலத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள பேபி கான்வெண்ட் பள்ளியில் இஸ்லாமிய மத குறிப்புகள் அடங்கிய விளக்கப்படங்களை மாண வர்களுக்கு விநியோகித்ததாக, பள்ளி யின் முதல்வர் மீது ஆர்எஸ்எஸ் மாண வர் அமைப்பான ஏபிவிபி குண்டர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித் துள்ளனர். புகார் அளித்த சில நிமிடங்க ளிலேயே காவல்துறையினர் பள்ளிக்கு தற்காலிக விடுமுறை அளித்து விசார ணையை தொடங்கியுள்ளனர்.
வன்முறை பதற்றம்
பேபி கான்வெண்ட் பள்ளியின் முதல்வராக இருப்பவர் ஐ.ஏ.குரேஷி. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் தான் இந்தி மொழியில் இஸ்லாமிய மதக் குறிப்புகள் அடங்கிய விளக்கப்படங்க ளை மாணவர்களுக்கு விநியோகித்ததாக ஏபிவிபி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பேபி கான்வெண்ட் பள்ளியில் முஸ்லிம் மதமாற்றம் நிகழ்வதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி - பஜ்ரங் தளம் - விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா அமை ப்புகள் மத வெறுப்புப் பிரச்சாரத்துடன், போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். இதனால் ராய்சென் மாவட்டத்தில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது.
பள்ளி நிர்வாகம் மறுப்பு
“எங்கள் பள்ளியில் இஸ்லாமிய மதக் குறிப்புகள் அடங்கிய விளக்கப்படங்க ளை மாணவர்களுக்கு விநியோகித்த தாக கூறப்படும் தகவல் போலியானது. பள்ளியின் முதல்வராக இருக்கும் ஐ.ஏ. குரேஷி விநியோகித்தது போன்று மத வெறுப்புச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள் ளது” என பேபி கான்வெண்ட் பள்ளி அறிக்கை அளித்ததாக செய்திகள் வெளி யாகியுள்ளன.