அமெரிக்காவின் அரசியலுக்கு வளைந்து கொடுக்கும் வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்து
புதுதில்லி இந்திய வெளியுறவுக்கொள்கை யை அமெரிக்காவின் அரசியல் லாபத்திற்காக வளைந்து கொடுப்பது இந்திய இறையாண்மை யை பாதிப்பதுடன் இந்தியர்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தை உருவாக் கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. குவாட் அமைப்பின் உச்சிமாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா வின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற ஆயத்த கூட்டத்தில் இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டகேசி இவயா, ஆஸ்தி ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங், அமெரிக்கா வெளியு றவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அரிய கனிமவளங் களை உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள் ளன. 90 சதவீதம் வரை அரிய காந்தங்கள், கனிமங்களை கட்டுப்படுத்தும் சீனா அதன் ஏற்றுமதி மீது கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் அமெரிக்கா இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது. மேற்குலக நாடுகளை மட்டுமே சார்ந்து இருக்கும் சர்வதேச பொருளா தாரக் கொள்கையை உடைத்து அனைத்து நாடுகளுக்கும் சம வாய்ப்பை உருவாக்க வேண்டும் என வளரும் நாடுகளை ஒருங்கிணைத்து வரும் சீனாவின் வளர்ச்சியை தடுக்க வும், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கவும் குவாட் என்ற அமைப்பை அமெ ரிக்கா உருவாக்கியுள்ளது. அதற்காக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பிரதான தெற்காசிய நாடுகளை பயன் படுத்த அமெரிக்கா திட்டமிடுகிறது. ஜி 7 மாநாட்டுக்கு சென்ற போது மோடியை சந்திக்காத டிரம்ப் பாகிஸ் தான் ராணுவத்தளபதியை அழைத்து விருந்து வைத்து கவுரவித்தார். மேலும் தற்போது பஹல்காம் தாக்கு தலுக்கு காரணமான பயங்கரவா தத்துக்கு ஆதரவு தரும் பாகிஸ்தா னின் பெயரை குறிப்பிடாமல் அமெ ரிக்காவின் ஆதிக்கத்தில் உள்ள குவாட் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. இந்த கண்டிப்பானது ஒரு ஏமாற்று வேலை. இது இந்தியாவை கேலிக்குள்ளாக்கும் போக்கு என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக ஜூன் 27 அன்று நடை பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்ட மைப்பு வெளியிட்ட அறிக்கையில் பஹல்காம் தாக்குதலை முறையாக கண்டிக்கவில்லை என இந்திய பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திடாமல் மறுத்தார். அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொ டுத்து அதன் பெயரை குறிப்பிடாமல் கண்டித்துள்ளதை இந்தியா அமைதி யாக ஏற்றுக்கொண்டதுடன் அவர்க ளுக்கு ஆதரவான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. ஏன் இந்த நிலைப்பாடு என கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் குறிப்பாக எல்லையோர, அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு மோசமடைந்து வருகிறது. இது இந்திய வெளியுறவுத்துறை கொள்கை யின் சரிவு. இதனால் இந்திய இறை யாண்மை மற்றும் இந்திய மக்களின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து உருவாகும் என கடுமையான விமர்ச னங்கள் எழுந்துள்ளன.