கடந்த அக்-17 ஆம் தேதி சென்னையில் மாணவர் விடுதி யொன்றைத் திறந்து வைத்து பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சமூகத்தவரை “ஹரிஜன்” எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. “ஹரிஜன்” என்பது கடவுளின் குழந்தைகள் எனும் பொருளைத் தருவ தால், அது பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தக் கூடியதாகவுள்ளது என அக்காலத்திலேயே அதற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. அதாவது, அச்சொல்லானது, “அப்பன் பெயர் தெரியாதவர்கள்” என்னும் பொரு ளைத் தருவதால் அதனைப் பயன்படுத்தக்கூடாது என ஒன்றிய அரசு 1982 - இலேயே ஆணையிட்டுள்ளது. இது ஆளுநருக்குத் தெரியாதா? அரசமைப்புச் சட்டத்தைப் போற்ற வேண்டிய ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் ஆளுநர். அவரே இப்படிப் பேசியிருப்பதால் மற்றவர்களும் அச்சொல்லைத் தயக்கமில்லாமல் பயன்படுத்தக்கூடும். எனவே, ஆளுநர் அவ்வாறு தான் பேசியது ஏன் என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்.
எஸ்.ஆர்.எஸ் சர்வோதயா பள்ளியின் மாணவியர் விடுதியைத் திறந்து வைத்து உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாட்டின் உயர்கல்வி நிலையை விமர் சித்துப் பேசியிருக்கிறார். அப்போது “உயர்கல்வியில் சேரும் ஹரிஜன் களின் (GER) விகிதம் 13% அல்லது 14% ஆக இருப்பதாகத் தெரிவித்துள் ளார்” பட்டியல் சமூகத்தின் உயர்கல்வி குறித்து ஆளுநர் அக்கறை காட்டுவது போலப் பேசியுள்ளார். வரவேற்றுப் பாராட்டுகிறோம். ஆனால் ஆதிதிராவிடர் எனும் சொல் இங்கே அதிகாரப்பூர்வமாக நடைமுறையிலிருக்கும் போது “ஹரிஜன்” எனக் குறிப்பிட்டு பேசியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது? திராவிடர் என்னும் சொல் மீதான வெறுப்புதான் காரணமா? அல்லது சனாதன உளவியல் காரணமா? தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறுவோரில் பொதுவான நிலையில் உள் ளோரின் சதவிகிதத்துக்கும் பட்டியல் சமூக மாணவர்களின் விகிதத்துக்கும் இடையே வேறுபாடு இருப்பது உண்மைதான். ஆனால் பட்டியல் சமூக மாண வர்களின் விகிதம் ஆளுநர் குறிப்பிட்டதைப் போல அது 13-14 சதவீத மல்ல, மாறாக 39.6 சதவீதமாகும். உண்மையில் தமிழ்நாடு அரசைக் குறை கூறுவதற்காக இப்படி ஆளுநர் பேசியிருக்கிறார். ஆனால் அவர் குறிப்பிட்ட புள்ளி விவரம் உயர்கல்வி குறித்த அனைத்திந்திய அறிக்கை 2019-20 இல் உள்ளதாகும். அதாவது அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்த நிலையைக் காட்டுவதாகும்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் பட்டியல் சமூகத்தினர் பலவாறாகப் பாதிக்கப்பட்டனர். அதில் முக்கி யமான பாதிப்பு அவர்களது உயர்கல்வியில் ஏற்பட்ட சரிவாகும். எனவே ஆளுநர் குறைகூற விரும்பினால் கடந்த அதிமுக ஆட்சியை குற்றம் சாட்ட வேண்டும். “ஹரிஜன்” என்ற சொல்லை சாதிச் சான்றிதழிலோ பிற இடங்களிலோ பயன் படுத்தக்கூடாது என 1982 ஆம் ஆண்டிலேயே இந்திய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஜைல்சிங் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்தபோது அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. (MHA letter No. 12025/44/80-SC & BCD1/IV Dated 10.02.1982). அதன் பின்னரும் ஒரு சிலரால் அந்தச் சொல் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்ததையொட்டி 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் நாள் இந்திய ஒன்றிய சமூக நலத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்க ளுக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது (No.12025/14/90-SCD (RL Cell) Dt 16.08.1990).
அதற்குப் பிறகும் கூட சிலர் அந்த சொல்லைப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்த நிலையில் சமூக நீதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு தனது ஒன்பதாவது அறிக்கையில் பரிந்துரை செய்தது. மாநிலங்களவையில் 19.08.2010 அன்று வைக்கப்பட்ட அந்த அறிக்கையில் சாதிச் சான்றிதழ்களில் மட்டுமல்ல, மற்ற விதங்களி லும் “ஹரிஜன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடு மாறு கூறியது. அதனடிப்படையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் இந்திய ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி யுள்ளது. (No.17020/64/2010 -SCD (RL Cell) Dt 22.11.2012) இந்திய ஒன்றிய அரசு இவ்வளவு சுற்றறிக்கைகளை வெளியிட்ட பின்ன ரும் அந்த அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை திட்டமிட்டே பொது வெளியில், அதுவும் மாணவர்களி டையே அந்த சொல்லைப் பயன்படுத்தி இருப்பதினை குறித்து முறையாக விசாரணை நடத்தி 2016-ஆம் ஆண்டின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் புதிய திருத்தத்தின் அடிப்ப டையில் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திட வேண்டும்.