states

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 620 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது!

புதுதில்லி, செப். 6 - இந்தியாவின் வெளிநாட்டு கடன் முந்தைய ஆண்டினைக் காட்டிலும், 2021 மார்ச் மாதத்தைக் காட்டிலும், 2022 மார்ச் மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவ காரங்களுக்கான துறையின் வெளிநாட்டு கடன் நிர்வாகப் பிரிவு இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2021-22 குறித்த 28-ஆவது நிலை அறிக்கை யை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2021 மார்ச் இறுதியில், 573.7 பில்லி யன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக்கடன், 2022 மார்ச் இறுதியில் 8.2 சதவிகிதம் அதிகரித்து 620.7 பில்லியன் (சுமார் 49 லட்சத்து 57 ஆயிரத்து 530 கோடி ரூபாய்) அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. எனினும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகி தத்தில் 2021 மார்ச் இறுதியில் 21.2 சதவிகித மாக இருந்த கடன் விகிதம், 2022 மார்ச்சில் 19.9 சதவிகிதமாக குறைந்துள்ளது.  அந்நியச் செலா வணி கையிருப்பு விகிதத்தின் அடிப்படையிலும் 2021 மார்ச்-சில் 100.6 சதவிகிதமாக இருந்த வெளி நாட்டுக் கடன், 2022 மார்ச்-சில் 97.85 சதவிகித மாக குறைந்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டுக் கடனில், நீண்ட கால கடன் அளவு 499.1 பில்லியன் டாலராக (சுமார்  39 லட்சத்து 86 ஆயிரத்து 311 கோடி ரூபாய்)  உள்ளது. இது மொத்த கடனில் 80.4 சதவிகிதம் ஆகும். குறுகிய காலக் கடன் என்பது 121.7 பில்லி யன் டாலராக (சுமார் 9 லட்சத்து 72 ஆயிரத்து 17 கோடி ரூபாய்) உள்ளது.

இது  மொத்தக் கடனில்19.6 சதவிகிதம். மொத்த வெளிநாட்டு கடனில் பெரும்பகுதி வணிகக் கடனாகவே உள்ளது. அதாவது 90 சத விகித வெளிநாட்டுக் கடன் வணிகக் கடனாக உள் ளது. வெளி நாடு வாழ் இந்தியர்களின் வைப்பு தொகைகள், குறுகிய கால வர்த்தக கடன் என பல வகையான கடன்கள் இதில் அடங்கும். அதேபோல நாட்டின் இறையாண்மை கடன்  விகிதமும் இந்தக் காலத்தில் 17.1 சதவிகிதம் அதி கரித்து, 130.7 பில்லியன் டாலராக (சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) அதி கரித்துள்ளது. இது சர்வதேச நாணய நிதியத் தால் ஸ்பெஷல் டிராவிங் ரைட்ஸ் (SDR) கூடுத லாக ஒதுக்கப்பட்டதன் காரணமாக இந்தளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே இறையாண்மை அல்லாத கடன் விகிதம் 2021 மார்ச்-சை விட 2022 மார்ச்-சில்  6.1 சதவிகிதம் அதிகரித்து, 490 பில்லியன் டால ராக உயர்ந்துள்ளது. இதுவும் பெரும்பாலும் வணிக கடனாகவே உள்ளது. என்ஆர்ஐ டெபாசிட் கள் மற்றும் குறுகிய கால கடன் என பல இதில் அடங்கும். மறுபுறத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட்கள் 2 சதவிகிதம் சரிந்து, 139 பில்லியன் டாலர்களாக (சுமார் 11 லட்சத்து 10 ஆயிரத்து 193 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. ஆனால், வணிக கடன் விகிதம் 209.71 பில்லியன் டாலர்களாகவும், குறுகிய கால வர்த்தக கடன் 117.4 பில்லியன் டாலர்களாகவும், அதிகரித்துள்ளது.

;