states

img

2022 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ரயில்வே வருவாய் ரூ. 95,486 கோடி!

புதுதில்லி, செப். 13 - இந்திய ரயில்வேயின் வருவாய் கடந்த ஆண்டைக் காட்டிலும் 38 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய ரயில்வே-க்களில் ஒன்றாக இருக்கும் இந்தியன் ரயில்வே, சுமார் 67 ஆயி ரத்து 956 கி.மீ. நீள ரயில் பாதை யைக் கொண்டு, தினமும் பல லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்திய ரயில்வே யின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 95 ஆயிரத்து 486 கோடி 58 லட்சமாக இருந்துள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டின் வருவாயைக் காட்டிலும் சுமார் 38 சதவிகிதம் அதிகமாகும். அதாவது 2021-ஆம் ஆண்டின் இதே காலத்தில் கிடைத்த வரு வாயைக் காட்டிலும் ரூ. 26 ஆயி ரத்து 271 கோடியே 29 லட்சம் அதிக மாகும். கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங் களில் பயணிகள் போக்குவரத்தின் மூலம் இந்திய ரயில்வே ரூ. 25 ஆயிரத்து 277 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டின் இதே காலத்தில் கிடைத்த ரூ. 13 ஆயிரத்து 574 கோடியே 44 லட்சம் வருவாயைக் காட்டிலும் 116 சதவிகிதம் அதிகமாகும். முன்பதிவுப் பெட்டிகள் மற்றும் சாதாரணப் பெட்டிகள் ஆகிய இரு பிரிவுகளிலும் பயணிகளின் போக்குவரத்து கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. நீண்ட தூர முன் பதிவு செய்யப்பட்ட மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வளர்ச்சி,  பயணிகள் மற்றும் புறநகர் ரயில்களி லிருந்ததை விட அதிகமாக இருப்ப தாகவும் ரயில்வே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலக்கரி, சிமெண்ட், உணவு தானியங்கள் மற்றும் எஃகு போன்ற பல மொத்தப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் ரயில்வே-யே முக்கிய போக்குவரத்து அமைப்பாக உள்ளது.

அந்த வகையில், இந்திய ரயில்வேயின் பார்சல் பிரிவு வலு வான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த பிரிவில் வருவாயானது, கடந்த ஆண்டில் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் சுமார் ரூ. 811 கோடியே 82 லட்சமாக இருந்தது, 2022 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ரூ. 2 ஆயிரத்து 437 கோடியே 42 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே போல சரக்குகள் மூலமான வருவாய் (Goods revenue) கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 10 ஆயி ரத்து 780 கோடியே 03 லட்சம் அதி கரித்து ரூ. 65 ஆயிரத்து 505 கோடியே 02 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த வருவாய் அதிகரிப்பிற்கு உணவு தானியங்கள், உரங்கள், சிமெண்ட், மினரல் ஆயில், கன்டெயி னர் டிராஃபிக் மற்றும் இதர பொருட் களை கையாண்டது முக்கிய பங் களிப்பாக பார்க்கப்படுகிறது. 58  மெட்ரிக் டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள் ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 18 சதவிகிதம் அதிகம். இயல்பான வணிக செயல்பாடு களைத் தவிர இதர பலதரப்பட்ட வருமானம் (Sundry income) எனப்படும் பிரிவிலிருந்து பெறப் பட்டுள்ள வருவாய் அளவும் கடந்த  ஆண்டின் இதே காலத்தில் பெறப்பட்ட சுமார் ரூ. 1,105 கோடி  வருவாயை விட, 2022 ஆகஸ்ட் வரை யிலான காலத்தில் ரூ. 2 ஆயிரத்து 267 கோடியே 60 லட்சமாக அதி கரித்துள்ளது. ரயில்வே சரக்கு போக்கு வரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு, ஜிஎஸ்டி, இ-வே பில்கள் போன்ற போக்குவரத்து தொடர்பான வேறு சில பொருளாதார நடவடிக்கை களும் முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகளின் இயக்கத்திற்காக வணிகங்களால் உருவாக்கப்பட்ட இ-வே பில்கள் ஆகஸ்ட் மாதத்தில் 78.21 மில்லியனை தொட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-22 நிதியாண்டில் ரயில்வே-யின் மொத்த வருவாய் ரூ. 1 லட்சத்து 91 ஆயிரத்து 278 கோடியே 29 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

;