states

img

அரிசிக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்பு 3 ஆயிரம் ஆலைகள் வேலைநிறுத்தம்

மதுரை, ஜூலை 16- அரிசி மீதான ஐந்து சதவீத ஜிஎஸ்டியை நீக்க வலியுறுத்தி தமிழகத்தில் சுமார் 3,000  அரிசி ஆலைகளை மூடி அதன் உரிமையா ளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  ஒன்றிய ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத் தில், பேக்கிங் செய்யப்பட்ட அரிசி உள்  ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்க ளுக்கும் ஐந்து சதவீதம் வரி விதிக்க முடிவு  செய்யப்பட்டது. இதை ரத்துச் செய்ய வலி யுறுத்தி, தமிழகம் முழுவதும் அரிசி ஆலை  உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் உட்பட தமிழகத்தில் குறிப் பிட்ட சில மாவட்டங்களில் அரிசி ஆலைகள்  இயங்கி வருகின்றன. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் 120 அரிசி ஆலைகள் உள்ளன. இதில் தற்போது 80 சதவீதம் ஆலை கள் இயங்கி வருகின்றன. காங்கேயத்தில் 125 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.  தமிழ்நாடு அரிசி ஆலைகள் உரிமையா ளர்கள் சங்கம் சார்பில் நமது செய்தியா ளரிடம் பேசிய திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த  அசோக்குமார், தமிழகம் முழுவதும் உள்ள 3,000 அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை  நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரிசி மீது  5 சதவீத ஜிஎஸ்டி காரணமாக, சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதன் காரண மாக தற்போது இருப்பதை விட அரிசி கிலோ வுக்கு ரூ.3 விலை அதிகரிக்கும். ஒவ்வொரு அரிசி ஆலையும் குறைந்தது  நாளொன்றுக்கு நான்கு டன் அரிசியை உற்பத்தி செய்வது வழக்கம். இந்த வேலை நிறுத்தத்தால் உற்பத்தியும் தடைபட்டது. அரிசி ஆலைகள் வேலை நிறுத்தத்தால் இங்கு பணியாற்றும் சுமார் ஒரு லட்சத்து 20  ஆயிரம் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல வில்லை.