பாஜக ஆளும் ம.பி.யில் கூட்ட நெரிசல் 2 பெண்கள் பலி ; 5 பேர் படுகாயம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததன் காரண மாக பாஜக ஆளும் மாநிலங்க ளின் கோவில்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்ப வங்கள் மிக மோசமான அளவில் அதி கரித்து வருகின்றன. இந்நிலையில், பாஜக ஆளும் மாநி லங்களில் ஒன்றான மத்தியப்பிர தேசத்தில் செவ்வாய்க்கிழமை அன்று குப்ரேஷ்வர் தாம் கோவிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். கோவிலின் நுழைவு வாயிலில் அள வுக்கு அதிகமானோர் திரண்டதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப் பான சூழல் உருவாகியுள்ளது. அப் போது, கூட்டநெரிசலில் சிக்கி, 50 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் பலியானதாக வும், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வும் செய்திகள் வெளியாகியுள்ளன. புதுதில்லி
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்
அனில் அம்பானி குழுமத்தின் பல நிறுவனங்கள் ரூ.10,000 கோடிக் கும் அதிகமான நிதி முறைகேடு களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், யெஸ் வங்கியில் வாங்கிய ரூ.3,000 கோடி கடனை தொழிலதிபர் அனில் அம்பானி சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 5ஆம் தேதி தில்லியில் உள்ள அம லாக்கத்துறை அலுவலகத்தில் விசார ணைக்கு நேரில் ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தொழிலதிபர் அனில் அம்பானி செவ் வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை அதிகாரி கள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விசாரணை இரவு வரை நீடித்ததாக செய்திகள் வெளி யாகின.