மணிப்பூரில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் புத னன்று காலை 11:06மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி யெய்ரி போக்கிலிருந்து கிழக்கே 44 கி.மீ தொலைவிலும், 110 கி.மீ ஆழத்திலும் இருந்தது என மேகாலயா மாநில நில அதிர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்னர் மணிப்பூரின் கம்ஜோங் மாவட்டத்தில் மதியம் 12:20 மணிக்கு 4.1 ரிக்டர் அளவிலான இரண்டாவது முறை யாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கம்ஜோங் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் 66 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.