states

இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய்

புதுதில்லி,ஜூன் 9-  இந்திய அளவில் நீரிழிவு நோய் குறித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண் டது.  அதில், இந்தியாவில் 10 கோடி (11.4%) பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 16.4 சதவீதம் பேர், கிராமங் களில் 8.9 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கோவா வில் 26.4 சதவீதம் பேருக்கும், புதுச்சேரியில்  26.3 சதவீதம் பேருக்கும், குறைந்தபட்சமாக உத்தப்பிரதேசத்தில் 4.8 சதவீதம் பேருக்கும் நீரிழிவு நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 14.4 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒரு கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 80 லட்சம் பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நீரிழிவு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 15.3 சதவீதம் பேருக்கும், தமிழ்நாட்டில் 10.2 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளன. நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு கிராமங்கள், நகரங்களில் சமமாக உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு நீரிழிவு இரு ந்த நிலையில், 4 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.