states

சாலை விபத்துகளில் 1,31, 714 பேர் பலி

புதுதில்லி, டிச.3- உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் பிரிஜ் லால் எழுப்பிய கேள்விக்கு  மாநிலங்களவையில் ஒன்றிய நெடுஞ் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி எழுத்துப்பூர்வ பதில் அளித்தார். அவர் கூறியதாவது: பொதுவாக சாலையில் நடக்கும் விபத்துக்கள் என்பது பாதசாரிகள் நடக்கும் போதும், போக்குவரத்து நெரிசலின்போது சாலைகளைக் கடக்கும்போதும் விதிகளைக் கடைப்பிடிக்காமல் இருக்கும்போது ஏற்படுகி றது. அதுமட்டுமல்லாமல் வாகனங்கள் உரிய வேகத்தில் செல்லாமல் அதிக வேகத்தில் செல்வதாலும் ஏற்படுகிறது. பாதசாரிகள் அதிகமாக விபத்துகளில் இறப்பது குறித்து இதுவரை எந்தவித மான ஆய்வும், அது தொடர்பான பகுப்பாய் வும் செய்யவில்லை. சாலைவிபத்துகளைத் தடுத்து, உயிர்களைப் பாதுகாக்கும் வகை யில் கடந்த 2019ம் ஆண்டு திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

சாலைப் பாதுகாப்பு, விதிகளை மீறினால் அபராதம், சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம், வாகனத்தணிக்கை, ஓட்டுநர் உரிமம், பரிசோதனை, காப்பீடு, மூன்றாம் தரப்பு காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய சட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், சாலையைக் கடக்கும்போது பாத சாரிகள் உயிரிழப்பது குறித்து எந்த ஆய்வும் நடத்தவில்லை” எனத் தெரிவித்தார் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2020-ஆம் ஆண்டில் 23,483 பேர் சாலையைக் கடக்கும் போதும், வாகனம்மோதி உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டைவிட சற்று உயிரி ழப்பு குறைந்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் 25,858 பேர் உயிரிழந்திருந்தனர். 2018-ஆம் ஆண்டில் 22,656 பேர் மட்டுமே உயிரிழந்தி ருந்தனர். 2020-ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 714 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.