“என்எஸ்ஓ குழுமம் என்ற பெயரிலான எந்தக் குழுமத்தையும் தடை செய்யும் திட்ட மில்லை” என மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணை யமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நீதிபதி கள், தூதரக பணியாளா்கள், பத்திரிகை யாளா்கள் உள்ளிட்டோரின் செல்போன் களை உளவு பார்க்க மோடி அரசால் பயன்படுத்தப்பட்டது என்று குற்றம் சாட்டப்படும் ‘பெகாஸஸ்’ உளவு மென் பொருளை தயாரித்த இஸ்ரேல் நிறு வனம்தான் ‘என்எஸ்ஓ குழுமம்’ என்பது குறிப்பிடத்தக்கது.