புதுதில்லி, அக்.3- மின்சாரம் மற்றும் உரம் தயாரிப்பதற்கும், வாகனங் கள் இயக்குவதற்கு அழுத் தப்பட்ட இயற்கை எரிவாயு (Compressed natural gas - CNG) என்ற பெயரிலும், வீடு களில் சமையல் பயன்பாட் டிற்கு குழாய் மூலமான இயற்கை எரிவாயு (Piped Natural Gas - PNG) என்ற பெயரிலும் இயற்கை எரி வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இயற்கை எரிவாயுவின் விலை, இது வரை இல்லாத அளவில் கடந்த வெள்ளிக்கிழமை யன்று 40 சதவிகிதம் உயர்த் தப்பட்டுள்ளது. சர்வதேச விலை நிலவ ரத்தின் அடிப்படையில் இந்த விலை உயர்வு செய்யப்பட் டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலி ருந்து மூன்றாவது முறை யாக இதன் விலை உயர்த் தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு கார ணமாக, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரிவாயுக்களின் விலையும் அதிக அளவில் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இவற்றின் விலை கடந்த ஓராண்டில் 70 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள் ளது. உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலை யை, அமெரிக்கா, கனடா, ரஷ்யா போன்ற மிகை உற் பத்தி நாடுகளின் விலை நில வரத்தின் அடிப்படையில், 6 மாதங்களுக்கு ஒருமுறை ஏப்ரல்1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் ஒன்றிய அரசு மாற்றியமைத்து வரு கிறது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் வரை இயற்கை எரி வாயுவின் விலை உற்பத்தி செலவைக் காட்டிலும் குறை வாக இருந்து வந்த நிலை யில், தற்போது அதன் விலை 40 சதவிகிதம் வரை உயர்த் தப்பட்டுள்ளது. முன்னதாக மிகை உற் பத்தி நாடுகளின் விலையின் அடிப்படையில் உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரி வாயு விலையை நிர்ணயம் செய்வது அதிக ஏற்ற - இறக் கங்களைக் கொண்டிருப்ப தால், அது நுகர்வோரை கடு மையாக பாதிக்கிறது என்ப தால், நியாயமான விலை நடைமுறையை வகுத்து பரிந்துரை செய்ய ஒன்றிய அரசின் திட்டக் குழு முன் னாள் உறுப்பினர் கிரித் எஸ். பரீக் தலைமையில் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை செப்டம்பர் இறுதியில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறி, பழைய முறையிலேயே விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.