states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு சுழற்சி அடிப்படையில் பணி

சென்னை, மே 19- தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அர சாணையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின் அடிப்படையில், அரசு மருத்துவமனை செவி லியர் உதவியாளர் தரம்-2 மற்றும் கடைநிலை ஊழி யர்கள் மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்பு ரவு பணியாளர்களுக்கு சுழற்சி அடிப்படையில் பணி  நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, செவிலியர் உதவியாளர் தரம் - 2 மற்றும் கடைநிலை ஊழியர்கள் மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 50 சத வீதம் பேர் முதல் சுழற்சியிலும், 25 சதவீதம் பேர்  இரண்டாம் சுழற்சியிலும், 25 சதவீதம் பேர் மூன்றாம் சுழற்சியிலும் பணியமர்த்தப்படுவார்கள். முதல் சுழற்சி நேரம் என்பது காலை 6 மணி முதல்  மதியம் 2 மணி வரை, இரண்டாம் சுழற்சி மதியம் 1 மணி  முதல் இரவு 9 மணி, மூன்றாம் சுழற்சி இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையாகும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் : இன்று விடுமுறை

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 22 அன்று தொடங்கியது. 10 அணிகள் பங் கேற்ற இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் ஞாயிறன்று நிறைவு பெற்ற நிலையில், ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மே 21 அன்று பிளே ஆப் சுற்று ஆட்டங் கள் நடைபெறுகிறது.

8 மாநிலங்கள் - 49 தொகுதிகள்  இன்று ஐந்தாம் கட்ட தேர்தல்

8 மாநிலங்களில் உள்ள 49 தொகு திகளுக்கான ஐந்தாம் கட்ட தேர்தல் திங்களன்று நடைபெறுகிறது. 18ஆவது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை மார்ச் 16 அன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி 7 கட்ட மாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு (380 தொகுதிகளு க்கு) நிறைவு பெற்றது.  இந்நிலையில், 5ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகு திகளுக்கு சனியன்று பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், திங்களன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாநிலங்களும்... தொகுதிகளும்...

1. பீகார் - 5 
2. ஜார்க்கண்ட் - 3
3. மகாராஷ்டிரா - 13
4. ஒடிசா - 5
5. உத்தரப்பிரதேசம் - 14
6. மேற்கு வங்கம் - 7
7. ஜம்மு&காஷ்மீர் - 1
8. லடாக் - 1

மகாராஷ்டிரா, ஜம்மு & காஷ்மீரில் இன்றுடன் தேர்தல் நிறைவு 48 தொகுதிகளை கொண்ட மகா ராஷ்டிராவில் 5 கட்டமாக தேர்தல் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 5ஆம் கட்டத் தேர்தலுடன் அங்கு தேர்தல் நிறைவுபெறுகிறது. அதே போல 5 மக்களவை தொகுதிகளை கொண்ட ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன்  பிரதேசங்களுக்கும்  5ஆம் கட்டத்துடன்  தேர்தல் நிறைவு பெறுகிறது.  ஒடிஷாவின் 35 சட்டமன்ற தொகுதிகளுக்கும்.. 21 மக்களவை தொகுதிகளை கொண்ட ஒடிஷா மாநிலத்தில் 147 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அறிவிப் பின்படி 4ஆம் கட்டத் தேர்தல் முதல் ஒடி சாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங் கியது. முதல்கட்டமாக கடந்த மே 13 அன்று (4ஆம் கட்டத்தில்) 5 மக்களவை மற்றும் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 5ஆம் கட்டத் தேர்தலில் 5 மக்களவை மற்றும் 35 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.

வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள்  3 பேர் கைது

வேலூர், மே 19- வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்தவர் கிளி என்கிற சதீஷ் (34). இவர் வேலூர் மாவட்ட பாஜக மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார். இவர் பள்ளிகொண்டா அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டதாக விஜய் பள்ளி கொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சதீஷை கைது செய்து நான்கு பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்த காவல்துறை யினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்த னர். மேலும் அவர் மீது அரக்கோணம் பகுதியில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. அதே போல காட்பாடி அடுத்த வெள்  ளக்கல் மேடு பகுதியில் காங்கேயநல்லூ ரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது  அவரை வழிமறித்த இரண்டு நபர்கள்  கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்  டுள்ளனர். இதனைப் பார்த்த பொதுமக் கள் இருவரையும் பிடித்து வைத்து காட்பாடி காவல் துறையினருக்கு தக வல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரையும் காவல் நிலை யம் அழைத்துச் சென்று மேற்கொண்ட  விசாரணையில் விருதம்பட்டு டி.கே.புரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ப தும் இவர் பாஜக கட்சியில் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளராக இருப்ப தும், மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த  நவீன் என்றும் அவர் பாஜக இளை ஞரணி மாவட்ட பொறுப்பாளராக இருப்  பதும் தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரன் அளித்த  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காட்பாடி காவல்துறையினர் இரு வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

500 ஆசிரியர்களுக்கு முன்னுரிமை

சென்னை, மே 19- 2021-22-ம் கல்வியாண்டில் பட்டதாரி  ஆசிரியர்களாக இடமாற்றம் செய்யப்  பட்ட 500 பேருக்கு 2024-2025-ம் கல்வி  ஆண்டுக்கான பொது இடமாறுதல்  கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பள்  ளிக் கல்வித் துறை செயலாளர் தெரி வித்துள்ளார்.

30 பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம்

சென்னை, மே 19- மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை சோதனை செய்யும் ஆக்ஸ் போர்டு ஆங்கில மொழி தேர்வு நிலையம்  (ஓஇஎல்எல்டி) உலகம் முழுவதும் 30 பல்கலை கழகங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.   ஆக்ஸ்போர்டு சர்வதேச கல்வி குழுமத்தின் ஒரு அமைப்பான இந்த தேர்வு நிலையம் வாஷிங்டன்  மாகாண  பல்கலைகழகம் போன்ற முன்னணி  பல்கலைக்கழகங்கள், இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல் பட தீர்மானித்துள்ளது. இந்த பல்கலை கழகங்களில் இந்திய மாணவர் கள் கல்வித் திறன் மற்றும்ஆராய்ச்சித் திட்டங்களுக்காக அதிகம் விரும் பப்படுகின்றனர். இவர்களுக்கு ஆங்கில மொழியின் திறனை சோதனை செய்யப்படுவதால் இந்திய மாணவர் கள் தங்கள் கல்விக் கனவுகளை வெளி நாடுகளில் சிரமமின்றி தொடர முடியும் என அந்த தேர்வு நிலையம் கூறியுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை

சென்னை, மே 18- எக்ஸ்பிரஸ் ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட மற்றும் பொது வகுப்பு பெட்டிளை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு  சென்னை திருவனந்தபுரம் மெயில் ‘எஸ்’ பெட்டியில் பயணம் செய்த வர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்ட னர். ஏராளமானோர் கழிப்பறை அருகே நின்று பயணம் செய்தனர். அவர்களில் பலரிடம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் மற்றும் காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டு களே இருந்தன.  வார இறுதி நாட்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் பெரும்பாலான ரயில்களில் இப்படி நடப்பது வழக்கமாக உள்ளது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆந்திரா, மேற்கு வங்கத்திற்கு செல்லும் பயணி கள் இப்படி அடிக்கடி பாதிப்புக்குள் ளாகின்றனர். தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளும், பொது வகுப்புப் பெட்டிகளும் குறைவாக இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் மத்தியில் மோதல் உருவாகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை பெங்களூரு சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒருவர் கத்தி யால் குத்தி கொல்லப்பட்டது குறிப்பி டத்தக்கது. அதேபோல் திருச்சூரில் எர்ணாகுளம் - பாட்னா விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருந்த ஒரு பயணி இறந்தார்.  எனவே கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். காத்தி ருப்போருக்கு இடம் வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன் கூறுகையில், டிக்கெட் இல்லாத பயணிகளை அகற்ற டிக்கெட் பரிசோதகர்களால் மட்டும் முடியாது.  எனவே ரயில்வே காவலர்கள் உதவிக்கு இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் அவர்கள் பாதுகாப்புக்கு இருப்பதில்லை. ஏனெனில் ரயில்வே பாதுகாப்பு படையில் நிறைய காலியிடங்கள் உள்ளன. மேலும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒவ்வொரு வகுப்பிற்கும் கூடுதலான தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.