திமுக சார்பில் சனிக்கிழமையன்று சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), சுப்ரியா சுலே எம்.பி (தேசியவாத காங்கிரஸ்), டிம்பிள் யாதவ் எம்.பி., (சமாஜ்வாதி), பீகார் உணவுத்துறை அமைச்சர் லேஷிசிங் (ஐக்கிய ஜனதா தளம்), சுபாஷினிஅலி (சிபிஎம்), சுஷ்மிதாதேவ் (திரிணாமுல்), தில்லி துணை சபாநாயகர் ராக்கி பிட்லான் (ஆம் ஆத்மி), ஆனிராஜா (சிபிஐ) உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்ற சுபாஷினி அலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார். அருகில் கனிமொழி எம்.பி. உள்ளார்.