states

பால் கொள்முதல் விலை உயருமா?

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்  கத்தின் மாநிலக்குழு கூட்டம் பெரம்பலூரில், சங்கத்தின் மாநி லத் தலைவர் கே.முகமது அலி தலை மையில் நடைபெற்றது. சங்கத்தின்  பொதுச் செயலாளர் பி.பெருமாள், பொருளாளர் ஏ.எம்.முனுசாமி, தமிழ்  நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்  செயலாளர் சாமி.நடராஜன், பெரம்ப லூர் மாவட்ட தலைவர் என்.செல்ல துரை, மாவட்டச் செயலாளர் ராஜேந்தி ரன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

 தீவனங்கள் விலை உயர்வு

தமிழ்நாட்டில் ஆவினுக்கு 5 லட்சம்  குடும்பங்கள், தனியார் நிறுவனங்க ளுக்கு சுமார் 10 லட்சம் குடும்பங்கள் தின சரி ஒன்றரை கோடி லிட்டர் பாலை வழங்கி வருகின்றனர். தற்போது கால்  நடை தீவனங்கள் விலை, கால்நடைகள்  விலை பலமடங்கு உயர்ந்துள்ள நிலை யில், அரசு வழங்கி வரும் பாலுக்கான  விலை போதுமானதாக இல்லை. எனவே, பசும்பாலுக்கு தற்போது வழங்கி வரும் விலையிலிருந்து ரூ.10 உயர்த்தி ரூ.45ம், எருமைப்பாலுக்கு ரூ.54ம் வழங்க வேண்டும். கால்நடை  தீவனங்கள் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்க வேண்டும். பாலை  வண்டியில் ஏற்றுவதற்கு முன்பாக பாலின் அளவையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை அமலாக்க வேண்டும். ஆவினில் நிலவுகின்ற ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் கம்பெனிகள் ஆவினைக் காட்டிலும் கூடுதலாக விலை கொடுத்து வரக் கூடிய நிலையில், தமிழ்நாட்டில் பல பால்  கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டுள்  ளன. இதே நிலை நீடித்தால் மேலும் பல சங்கங்கள் மூடும் அபாய நிலைக்கு  போய்விடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆரம்ப சங்க ஊழி யர்களுக்கு சம்பள உயர்வு, பணிப்பாது காப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோ பர் 17,18,19 தேதிகளில் கறவை மாடுகளு டன் ஆவின் ஒன்றிய அலுவலகங்கள் முன்பும், மாவட்ட ஆட்சியர் அலுவல கங்கள் முன்பும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.