சென்னை, ஜூலை 5- தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங் கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 2023-24 கரும்பு அரவை பரு வத்திற்கு ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.10 மட்டுமே (ஒரு டன்னுக்கு ரூ.100) எப்ஆர்பி (FRP) விலையை உயர்த்தி ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளதை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. விவசாயி களின் பாதுகாவலன் என்றும், விவசாயி களின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்றும் கூறிய பிரதமர் மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு கடந்த ஐந்தாண்டு களில் ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ. 275ல் இருந்து 10.25 சதவீதம் பிழிதிற னுக்கு ரூ.315 என ரூ.40 மட்டுமே எப்ஆர்பி விலையை உயர்த்தியுள்ளனர். இதே காலத்தில் கரும்பு உற்பத்தி செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்திச்செலவுடன் 50 சதவீதம் கூடு தலாக சேர்த்து 9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்பு ஒரு டன்னுக்கு ரூ. 5 ஆயி ரமாக எப்ஆர்பி விலை வழங்கிட வேண்டு மென்ற விவசாயிகளின் கோரிக்கையை பாஜக ஒன்றிய அரசு ஏற்கவில்லை.
ஒன்றிய அரசு 9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.2919 மட்டுமே விலை அறிவித்துள்ளது. இது தான் தமிழ்நாட்டில் கரும்பு விவசாயி களுக்கு 2023-24 இல் விலையாக வழங் கப்படும். உரம், உழவடை செலவுகள், வெட்டுக்கூலி உயர்ந்து தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்பு உற்பத்தி செலவு ரூ.2925 ஆகிறது. ஆனால் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிஏசிபி ஒரு டன் கரும்பு உற்பத்தி செலவு ரூ.1570 தான் ஆகிறது என்று கணக்கிட்டு இத்துடன் ஒன்றிய அரசு 100 சதவீதம் சேர்த்து கரும்புக்கு விலை அறிவித்திருப்பதாக மோடி அரசு நாடு முழுவதும் உள்ள ஐந்து கோடி கரும்பு விவசாயிகளை ஏமாற்றி யுள்ளது. கரும்பு விவசாயிகளை மட்டு மல்ல. நாடு முழுவதும் உள்ள ஒட்டு மொத்த விவசாயிகள், விவசாயம், பாஜக அரசின் கொள்கைகளால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கார்ப்பரேட், பெரும் நிறுவனங்க ளுக்கு ஆதரவான வேளாண் கொள்கை களை அமல்படுத்தி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் 9.5 சதவீதம் பிழி திறன் கொண்ட கரும்பு டன் ஒன்றுக்கு எப்ஆர்பி ரூ.5000 அறிவித்திடக் கோரி 20.07.2023 அன்று சர்க்கரை ஆலை கள் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங் கள் முன் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.