திறமையற்ற ஒரு நிர்வாகத்தால் மணிப்பூரின் கொதிநிலை தொடர்ந்து நீடிக்கிறது. மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் நிலையான அமைதிக்கான அறிகுறிகள் அங்கே தெரியவில்லை. சட்டம் - ஒழுங்கு முழுவதுமாக சீர் குலைந்து கிடக்கிறது. சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. மரணங்களை விளைவிக்கக் கூடிய தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கின்றன. மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நெறியற்ற நிகழ்வுகள்
காவல்துறைக்கும் துணை ராணு வமான அஸ்ஸாம் ரைபிள்சுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறு பாடுகள். அஸ்ஸாம் ரைபிள்ஸ் - படை யின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்துவிட்டு,அதன் மீதே மணிப்பூர் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது என நெறியற்ற நிகழ்வு களும் நடக்கின்றன. இனப் புதைகுழியில் இருந்து மக்களை மீட்டு எடுப்பதற்கு மாறாக எளிதில் தீப்பிடிக்க காத்திருக்கும் ஒரு எரிபொருளைப் போன்று நிலைமையை பதற்றமாகவே அரசு நிர்வாகம் வைத்துள்ளது.மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் உள்ளனர்.பல வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அமை திக்காக ஏங்கும் சாமானிய மக்கள் வன்முறை மற்றும் அச்சுறுத்தலுக்குத் தான் உள்ளாகி வருகின்றனர்.
மோடி - ஷா வின் போதனை!
கலவரத்துக்கு காரணம் என்ன என்பதை விவாதித்து,தீர்வினை நோக்கிச் செல்லும் வகையில் உரிய வர்களுடன் விவாதம் நடத்தி, மத நல்லிணக்கத்தை மீண்டும் ஏற்படுத்திட நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் என்ற நல்ல வாய்ப்பு கிடைத் தது. பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் போதனைகளைத் தாண்டி என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் சொல்லாததால் அந்த வாய்ப்பையும் இழந்ததைப் போல தெரிகிறது. மெய்டெய் மற்றும் குக்கி,ஜோ தலைவர்களின் தீர்க்க முடியாத நிலைப்பாடுகளால் இன மோதலை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் இருப்பதை மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள் கூறுகின்றன. மெய்டெய் இனம் சார்பாக மாநில அர சாங்கத்தின் செயல்பாடுகள்- குறிப்பாக முதல்வர் பைரேன் சிங்கின் நடவடிக்கைகள் குக்கி - ஜோ மக்களை அந்நியப்படுத்தும் வகையில் உள்ளது என்பதை மெய்டெய் இனத்தவர் ஏற்க மறுக்கின்றனர். குக்கி- ஜோ பிரிவினரோ “தனி நிர்வாகம்” என்ற கருத்தை வலியுறுத்த முயல்கிறார்கள். நாகா போன்ற பல பிரிவினரையும் உள்ளடக்கிய மாநிலத்தில் பல்வேறு இன அடையாளங்களுடன் வாழும் மக்களின் சகவாழ்வை இத்தகைய நிலைப்பாடுகள் மேலும் சிக்கலாக்கு கின்றன. குடிமைச் சமூகத்தின் பிரதிநிதி கள் தங்கள் குறுகிய இன வேறுபாடு களை கடந்து ஒற்றுமைக்காக குரல் எழுப்பாததும் மோதலை அதிகப் படுத்தி உள்ளது.
மாநில அரசே காரணம்!
மாநில அரசாங்கம் எவ்விதத்திலும் பொறுப்பேற்க மறுப்பது,அதன் தலை மையை மாற்ற மறுப்பது - இந்தக் கார ணங்களால் தான் இன்று மணிப்பூரின் நிலைமை மிக மோசமடைந்துள்ளது. மத நல்லிணக்கம் ஏற்பட இது ஒன்றே சாத்தியக்கூறாக தெரிகிறது. மணிப்பூர் ஒரு முக்கிய எல்லை மாநிலம் .மெய்டெய் மற்றும் குக்கி- ஜோ இனத்தவர்களிடையே தொடரும் இந்த அவநம்பிக்கை மாநிலத்தின் முன்னேற் றத்தை தடுத்து நிறுத்தும் .எதிர்கால சந்ததியினரிடமும் ஒரு நீடித்த தாக் கத்தை ஏற்படுத்தும்.
ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?
ஒன்றிய அரசுக்கு முன் உள்ள தெரிவு கள் தெளிவாக உள்ளன. எந்த ஒரு விமர்சனத்தைப் பற்றியும் சிறிதும் கவலைப்படாமல், குறுகிய மனப் பான்மையுடனே தற்போதைய நிலை யை மேலும் ஒரு குழப்பமான தேக்க நிலைக்குள் கொண்டு செல்லலாம் அல்லது மத நல்லிணக்கத்தை மீண்டும் ஏற்படுத்த உதவும் வகையில் மாநிலத் தின் தலைமையில் உறுதியான மாற் றங்களை செய்து முடிக்கலாம்.
தி இந்து’ ஆங்கில நாளிதழின்
தலையங்கம் : (23/8/23)
தமிழில் : கடலூர் சுகுமாரன்