states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு திங்களன்று நிறைவு பெற்ற நிலை யில், புதனன்று தில்லி காங்கிரஸ் தலைமை அலு வலகத்தில் வாக்கு எண் ணிக்கை நடைபெறு கிறது. வாக்கு எண்ணிக் கைக்கு முன்பாக அனை த்து மாநிலங்களில் பதி வான வாக்குச் சீட்டு களும் ஒன்றாக குவிக்கப் பட்டு குலுக்கப்படும். முடிவுகள் உடனே அறி விக்கப்பட்டாலும், எந்த மாநிலத்தில் யாருக்கு அதிக வாக்குகள் கிடை த்தது என்பது அறிவிக்கப் படாது என்பது குறிப் பிடத்தக்கது.
  2. கொரோனா தொற்றை வெற்றி கொண்டுவிட்ட தாக கூறியது, கருப்புப் பணத்தை மீட்பேன் எனக் கூறியது, கங்கையை தூய்மைப்படுத்துவதாக கூறியது, இந்தியாவை 5 டிரில்லியன் டாலர்  பொருளாதார நாடாக  மாற்றுவேன் எனக்  கூறி யது என அடுக்கடுக்கான பொய்களை அள்ளி வீசி யிருக்கிறார் பிரதமர் மோடி. அவரைதான் முத லில் உண்மைக் கண்ட றியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என ஆம் ஆத்மி எம் எல்ஏவும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரு மான சவுரவ் பரத்வாஜ் பேசியுள்ளார்.
  3. நெய்க்கு பதிலாக வனஸ் பதி எனப்படும் “டால்டா வை” பயன்படுத்தி ஆவின் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதாக “தினமலர்” நாளிதழ்  வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என ஆவின் மேலாண் இயக்குனர் விளக்கத்து டன் பதிலடி கொடுத்துள் ளார்.
  4. தில்லியில் ஆபரேஷன் தாமரையை வெற்றிகர மாக்குவதற்காக இப்படிப் பட்ட விசாரணை என்னி டம் நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் பொழுது முதல்வர் பதவி யை தருவதாக சொன் னார்கள். அதை  மறுத்து விட்டேன். எக்கார ணத்தையும் கொண்டு ஆம் ஆத்மியை விட்டு பாஜகவிற்கு செல்ல மாட்டேன் என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். 
  5. இந்தோனேசியாவின் மலாங் நகரில் உள்ள கஞ்சுருஹான் கால்பந்து மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் போது மை தானத்தில் வன்முறை வெடித்ததில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த னர். வன்முறை சம்பவம் தொடர்பாக சம்பந்தப் பட்ட கால்பந்து கிளப் பின் அதிகாரிகள் 2 பேரு க்கு வாழ்நாள் தடை விதி க்கப்பட்ட நிலையில், வன்முறை நடைபெற்ற கஞ்சுருஹான் கால்பந்து மைதானத்தை இடிக்க இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது.
  6. தீபாவளி, சாத் பண்டிகை களை முன்னிட்டு கூடுத லாக 32 சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே  அமைச்சகம் அறிவித்துள்ள்ளது.
  7. நாட்டின் பொருளாதார சிக் கலுக்கு எங்களது தவ றான கொள்கையே கார ணம். அதற்காக நாட்டு மக் களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் கூறியுள்ளார்.
  8. நேபாளத்தின் ஆளும் கூட்டணிக்குள் மோதல் முற்றி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வந்து, தேர்தல் காலக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தபிறகும், நான்கு அமைச்சர்களைப் பொறுப்பில் இருந்து பிரதமர் ஷேர் பகதூர் தியூபா நீக்கியுள்ளார். ஆளும் கூட்டணியில் உள்ள ஜனதா சமாஜ்வாதிக் கட்சி, எதிர்க்கட்சியான நேபாள கம்யூனிஸ்ட்(ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)கட்சியுடன் தேர்தல் உடன்பாட்டை மேற்கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  9. ஸ்வீடனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் வலதுசாரிக் கட்சித் தலைவர் உல்ப் கிரிஸ்டெர்சன், ஏராளமான அளவில் வரிகளை வெட்டப் போவதாக அறிவித்திருக்கிறார். அதோடு பல்வேறு நலத்திட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள், புதிய அணுமின்நிலையங்களைக் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக ஸ்வீடனில் வலதுசாரிகள் பெரும்பான்மை பலத்தைப் பெற்றனர்.
  10. அமெரிக்கக் கப்பற்படையில் உள்ள மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான பென்போல்டு ஜப்பானின் ஹகோடேட் துறைமுகத்திற்கு வந்தது. தங்கள் மண்ணிற்கு போர்க்கப்பல் வந்ததற்கு ஜப்பான் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “ஹகோடேட் அமைதியைக் குலைக்காதீர்கள்” உள்ளிட்ட முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதுபோன்ற போர்க்கப்பல்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்கேற்ற ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஹோன்மா கட்சுமி தெரிவித்தார்.
;