சென்னை,ஜூலை 10- குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி, இந்த திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றன. இந்த திட்டத்துக்கு கலை ஞர் மகளிர் உரிமைத் தொகை என பெயரிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான விண்ணப்ப பதிவுக்கு உதவும் வகையில், ரேசன் கடைகளில் தன்னார்வலர்களை நிய மனம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு நியாய விலைக் கடைக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் கள், நியாய விலைக் கடைகளில் விண்ணப்பம் பெற சிறப்பு முகாம்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.தகுதியான பயனாளிகளை கண்டறியும் பொருட்டு சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள தன்னார்வலர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், விருப்பம் இல்லாத தன்னார்வலர் களை விண்ணப்ப பதிவுக்கு பயன் படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு 2 கி.மீ.க்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்கவும், தன்னார்வலர்கள் விருப்பப்பட்டால் 2.கி.மீ தொலைவுக்கு மேல் பணி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியாய விலைக்கடை அளவில் பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.