states

சாமி கும்பிட வந்த தலித் இளைஞரை கோயிலை விட்டு வெளியேற்றிய அர்ச்சகர்!

பெங்களூரு, அக். 14 - பூஜை பொருட்களுடன் வழிபாட்டுக்கு வந்த தலித் இளை ஞரை, கோயிலை விட்டு வெளியேறுமாறு அர்ச்சகர் ஒருவர் மிரட்டிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம், துமகுரு மாவட்டம், குப்பி தாலுகா, நிட்டூர் கிராமத்தில் முல்கத்தம்மா கோயில் உள்ளது.  இந்த கோயிலுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த அனில்ராஜ்  என்ற தலித் இளைஞர் வழிபாட்டுக்குச் சென்றுள்ளார்.  மேலும், தான் எடுத்துச் சென்ற பூ, தேங்காய், பழம், தூபக்குச்சிகளை அம்மனுக்கு படைத்து அர்ச்சனை செய்து தருமாறு கோயில் அர்ச்சகரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  அப்போது, அனில் ராஜ் தலித் என்பதால்,  அவர் கொண்டுவந்த பூஜை பொருட்களை வாங்கி அர்ச்சனை  செய்ய மறுத்த அர்ச்சகர், கோயிலை விட்டு வெளியேறு மாறும் தலித் இளைஞர் அனில் ராஜை மிரட்டியுள்ளார். அத்து டன் கோயிலுக்கு வெளியேயும் அவர் தள்ளிவிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் அளிக்கப்படாத நிலையில், வீடியோ ஆதாரங்களை வைத்து, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகநலத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;