மாஸ்கோ, ஜுன் 01 - ஆளில்லா விமானங்களைக் கொண்டு ரஷ்யாவின் தலைநகரம் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன் ராணுவம் முயற்சி செய்ததாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன. கடந்த ஓராண்டிற்கும் மேலாக ரஷ்யா வுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான மோதல் நடைபெற்று வருகிறது. உக்ரை னின் சில பகுதிகளை “விடுவிக்கப்” போவ தாகக் கூறி ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளது- உக்ரைனின் பல பகுதிகள் கடுமையான அழிவைச் சந்தித்துள்ளன. ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு பல கோடி டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வழங்குகின்றன. இதனால் பேச்சு வார்த்தை என்பதற்கான வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில், ரஷ்யத்தலைநகர் மாஸ்கோவைக் குறிவைத்துத் தாக்க ஆளில்லா விமானங்கள் வந்ததாகவும், அவற்றைத் தடுத்துத் தகர்த்து விட்டதாக வும் ஜனாதிபதி அலுவலகச் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரி வித்துள்ளார். ரஷ்ய விமானப் படை மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவை இந்தத் தாக்குதல்களை வெற்றிகரமாக எதிர் கொண்டன என்றும் அவர் குறிப்பிட்டிருக் கிறார். உக்ரைனின் இந்த ஆளில்லா விமானங்கள் மூலமானத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி விளாடிமீர் புடினிடம் எடுத்துச் சொல்லப்பட்டு விட்டதாக பெஸ்கோவ் கூறியுள்ளார். இந்தத் தாக்கு தல்கள் நிச்சயமாக உக்ரைன்தான் செய்தது என்று ரஷ்யத்தரப்பு தெரிவிக் கிறது. ஆனால் இந்தத் தாக்குதல் களுக்கும், தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று உக்ரைன் மறுத்திருக்கிறது.