states

தீக்கதிர் விரைவு செய்திகள்

உத்தவ் தாக்கரே - அஜித் பவார் திடீர் சந்திப்பு

சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா மும்பையில் மகா ராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரை திடீரென சந்தித்தார். சந்திப்பின் பொழுது உத்தவ்  தாக்கரே அஜித் பவாருக்கு  பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்த நிலையில், புதனன்று உத்தவ் தாக்கரே சந்த்தித்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி பயப்படுகிறார்: கார்கே

“தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்ற 38 கட்சிகள்  பதிவு செய்யப்பட்ட கட்சிகளா என்பது எனக்குத் தெரியாது. முன்பு எந்தக் கூட்டமும் நடத்த வில்லை, ஆனால் இப்போது பாஜக கூட்டாளிகளை ஒவ்வொன்றாகச் சந்திக்கின்றது. பிரதமர்  மோடி இப்போது எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படுகிறார்” என காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். 

உ.பி.யில் பாஜக தலைவருக்கே பாதுகாப்பில்லை!

பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தின் சாஜிபூர் கிராமத்தில் பாஜக பூத் தலைவரான தினேஷ் சிங்கை (40) 6 பேர் கொண்ட கும்பல் அடித்தே கொன்றது. தினேஷ் சிங்கின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். சொந்த கட்சித் தலைவருக்கு கூட பாதுகாப்பு இல்லாத இடமாக பாஜக ஆளும் உத்தரபிரதேசம் மாறி வருகிறது.

பீகார் முன்னாள் முதல்வர் அலறல்

“ஒரு அரசியல் கட்சி அல்லது அரசியல் கூட்டணிக்கு எந்த நாட்டின் பெயரையும் சூட்டக் கூடாது. எதிர்க்கட்சிகள் வாக்காளர்களைக் கவர “இந்தியா” பெயரை வைத்திருக்கலாம் என சந்தேகமாக உள்ளது” என, எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பெயரை “இந்தியா” என சூட்டியிருப்பதை கண்டு பாஜக கூட்டணியில் இருக்கும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மஞ்சி அலறியுள்ளார்.

நாங்கள் தீண்டத்தகாதவர்களா? மஜ்லிஸ் கட்சி ஆதங்கம்

“ஒரு காலத்தில் பாஜகவில் இருந்த நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே, மெகபூபா முப்தி போன்ற  தலைவர்கள், குஜராத் சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரசுக்கு எதிராக இருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு அரசியல் தீண்டத்தகாதவர்கள் போல பாவித்து, எதிர்க்கட்சி கூட்டத்திற்கு அழைக்கவில்லை” என ஏஐஎம்ஐஎம் செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதான் ஆதங்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா: பாஜக எம்எல்ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்

பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது ஐஏஎஸ் அதிகாரிகளை பணியமர்த்தியது தொடர்பாக கர்நாடக சட்டசபையில் புதனன்று பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளியின் போது துணை சபாநாயகர் மீது காகிதங்களை எறிந்து பாஜக எம்எல்ஏ-க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் 10 பேரை பணியிடை நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

விரக்தியில் சந்திரபாபு நாயுடு

தில்லியில் செவ்வாயன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி களின் கூட்டம் நடைபெற்றது. 38 கட்சிகள் பங்குபெற்ற இந்த  கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு  விடுக்காததால் பாஜக மீது தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயடு கடும் அதிருப்தி யடைந்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வருடன் க.பொன்முடி சந்திப்பு

சென்னை,ஜூலை 19- சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் க. பொன்முடி வீட்டில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய  காவல் படையினருடன் சோதனை நடத்தி னர். மேலும், சென்னை அலுவலகம், விழுப்புரம் வீடு உள்ளிட்ட 13 இடங்களி லும் இந்த சோதனை நடைபெற்றது. மேலும் அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக் கத்துறை சோதனை நடத்தினர். இந்நிலையில், அமைச்சர் பொன் முடி புதன்கிழமை (ஜூலை 19) சென்னை  ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். 

மதுபானங்களின்  விலை உயர்வு

சென்னை, ஜூலை 19- தமிழ்நாட்டில் 4,500க்கு மேற்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகள்  செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பானமான, பீர், ஒயின் விலையை  டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலை குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மது பானங்களின் விலை உயர்வு புதனன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய்  கூடுதலாக வாங்குவது குறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்தால்  ரூ.10 அதிகம் வாங்கும் டாஸ்மாக்  கடை விற்பனையாளர்களை கண்டறிந்து  அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின் தடைகளை உடனடியாக சரி செய்க!

அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 19- மின்தடைக்கான காரணத்தை  கண்டறிந்து உடனடியாக சரி  செய்ய நடவடிக்கை எடுக்க வேண்  டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். பொறியாளர்களுடன் சென் னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆலோ சனை நடத்திய அவர், மின்தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவ னம் செலுத்தி அதற்கான கார ணத்தை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற் கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்  சர் உத்தரவிட்டார்.மின்னகம்  மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், தடையில்லா மின்சாரம் தொடர்ந்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வும் அறிவுறுத்தினார்.

உலகச் செய்திகள்

சுரங்கத் தொழில்களை மேற்கொள்ளும் கனடாவின் பெரு நிறுவனமான மினெரா பனாமா மீது பனாமாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே இது போன்ற வழக்கு ஒன்று 2017 ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்டபோது, ஆர்வலர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க தாகும்.

தங்கள் ஒப்புதல் இல்லாமல் சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டின் குழுவினர் நாட்டுக்குள் புகுந்ததற்கு சிரிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின்  வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோத மாக புகுந்த குழுவினர் பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இது சிரியாவின் இறையாண்மையை மீறும் செயலாகும் என்று கூறியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், தக்கவைத்துக்கொள்ளும் அளவிலான பல்வேறு வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக வும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களைச் செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று  ஜி20 ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து வேறுபாடுகளை யும் மறந்து பூமிப்பந்தைக் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைந்து செய ல்பட வேண்டும் என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

;