பிரதமர் இன்று ஆலோசனை
ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 90 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 123 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவ தொடங்கி உள்ளதாலும் பண்டிகைகள் வருவதாலும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். ஒமைக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுதில்லி,டிச.22- புதிய வகை கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகை யில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று ஒன்றிய சுகாதா ரத்துறை செயலார் ராஜேஷ் பூஷன் தெரி வித்துள்ளார். ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடு களில் பரவத்தொடங்கியுள்ளது. இந்தியா வில் 213 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை செயலார் ராஜேஷ் பூஷன் மாநில அரசு களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா தொற்று பரவல் 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களாக அறிவிக்க வேண்டும் . டெல்டாவை விட ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்ப தால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் வசதி இருப்பை உறுதி செய்ய வேண்டும் .கொரோ னா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம். நாடு முழுவதும் 4 நாட் களில் ஒமைக்ரான் பரவல் இரட்டிப்பா கியுள்ள நிலையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தீவிரப் படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.