states

மோடியின் வாய் ஜாலத்திற்கு மரணஅடி கொடுத்த ஜார்க்கண்ட் பழங்குடி மக்கள்

ஜார்க்கண்டில் பழங்குடியின மக்கள் போட்டியிடும் தொகு திகளான குந்தி, லோஹர்ட கா, சிங்பூம், ராஜ்மஹால் மற்றும் தும்கா  ஆகிய ஐந்து தொகுதிகளிலும் ஏற்கனவே வென்றிருந்த பாஜக இம்முறை தோல்வி யைத் தழுவியுள்ளது. இது பழங்குடியின மக்கள் மோடியை கைவிட்டுவிட்டனர் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. பாஜகவிடமிருந்து குந்தி, லோஹர்டகா தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றிய நிலை யில், சிங்பூம், ராஜ்மஹால் மற்றும் தும்கா வில் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா வெற்றி பெற்றுள்ளது. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 17-ஆவது மக்களவைத் தேர்தலில்  ராஜ்மஹால்  சிங்பூம் ஆகிய இரண்டு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்த லில் ராஜ்மஹால், சிங்பூம் தொகுதிகளை ஜேஎம்எம் கட்சியிடம் பாஜக பறிகொடுத்தது. குந்தி, லோஹர்டகா தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.   முன்னாள் முதல்வர் மதுகோடாவின் மனைவி கீதா கோடா, மக்களவைத் தேர்தலு க்கு முன்னதாக பாஜகவில் இணைந்து சிங்பூம் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஜேஎம்எம் கட்சி சார்பில் ஜோபா மஞ்சி போட்டியிட்டார். இதில் கீதா கோடாவை (பாஜக) 1,68,402 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோபாமஞ்சி (5,20164 வாக்குகள்)   வீழ்த்தியுள்ளார். கீதா கோடா சிங்பூம் தொகுதி மக்களவை உறுப்பினராக (2019–2024) பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லோஹர்டகா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சுக்தேயோ பகத்  (4,83,038 வாக்குகள்)  தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சமீர் வோரா னை (3,43,900) 1,39.138  வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சமீர் வோரான் பாஜகவின் ஜார்க்கண்ட் மாநில பட்டி யல் பழங்குடிகள் மோர்ச்சாவின் தலைவர் மட்டுமல்ல, ஜார்க்கண்ட் மாநில பாஜக தலை வரும் கூட. தும்கா தொகுதியில் போட்டியிட்ட ஜார்க்க ண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் நளின் சோரன் (5,47,370) தம்மை எதிர்த்துப் போட்டி யிட்ட பாஜக வேட்பாளர் சீதா சோரனை (5,24,843) 22,527 வாக்குகள் வித்தி யாசத்தில் வீழ்த்தினார்.

சீதா சோரன் ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபு சோரனின் மருமகளும் மறைந்த துர்கா சோரனின் மனைவியும் ஆவார். நளின் சோரன் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலை வரும் ஏழுமுறை எம்எல்ஏவாகவும் இருந்த வர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்மஹால் தொகுதியில் ஜேஎம்எம் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் ஹன்ஸ்டாக் (6,13,371 வாக்குகள்)  பாஜக சார்பில் போட்டி யிட்ட பாஜக வேட்பாளர் தல மராண்டியை (4,35,107) 1,78,264) வாக்குகள் வித்தியா சத்தில் தோற்கடித்தார், பழங்குடியினர், குறிப்பாக ஜார்க்கண்ட் பழங்குடியினருக்காக பிரம்மாண்ட திட்டங்க ளை அறிவித்தார் மோடி. பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் பிறந்த நாளை (நவம்பர் 15) ‘ஜன்ஜாதியா கௌரவ் திவஸ்’ என்று மோடி அறிவித்தார். (பழங்குடி யினரின் கலாச்சார பாரம்பரியத்தை பாது காப்பது,  பழங்குடியின மக்களின் முயற்சிக ளை அங்கீகரிப்பது ஜன்ஜாதிய கவுரவ் திவஸ்) கொண்டாடப்படும்.  ஜார்க்கண்ட் பழங்குடி யின மக்கள் தங்கள் நிலத்தையும், காடுகளை யும் பாதுகாத்துத் தரத் தவறிய மோடியின் வார்த்தை ஜாலங்களை பழங்குடியின மக்கள் நம்ப மறுத்து ஐந்து தொகுதிகளிலும் பலத்த அடி கொடுத்துள்ளனர்.